10,488 காலிப்பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தி மாநாட்டில் வலியுறுத்தல்
ஈரோடு: ஈரோட்டில், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. துணைத் தலைவர் குருராகவேந்திரா கொடியேற்றினார். மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கவிதா வரவேற்றார்.மாநில செயலாளர் செந்தில்குமார், மாநில துணைத் தலைவர் குமரேசன், ரமேஷ், விஜய் உட்பட பலர் பேசினர். மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர், கணினி தட்டச்சர் பணியிடம் ஏற்படுத்தி நிரப்ப வேண்டும். உள் வட்ட வருவாய் ஆய்வாளர் பணியிடத்தை துணை தாசில்தார் நிலைக்கு உயர்த்த வேண்டும். ஆன்லைனில் அனைத்து மனுக்களும் பதியப்படுவதால், கள ஆய்வுக்கு பயணப்படியை உரியவாறு வழங்க வேண்டும்.வருவாய் அலுவலகங்களில் காலியாக உள்ள, 10,488 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சென்னிமலையை தலைமையிடமாக கொண்டு தாலுகா அமைக்க வேண்டும். மொடக்குறிச்சி, நம்பியூர் தாலுகா அலுவலகம் முன் பஸ் ஸ்டாப் ஏற்படுத்த வேண்டும். மொடக்குறிச்சி, தாளவாடி, நம்பியூரில் சார் நிலை கருவூலங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.