உள்ளூர் செய்திகள்

ரூ.111 கோடியில் புதிதாக 10 ஐ.டி.ஐ.,

சென்னை: தமிழ்நாட்டில் 10 இடங்களில் ரூ.111 கோடியில் புதிய ஐ.டி.ஐக்கள் துவங்கப்பட உள்ளது.கடலுார் மாவட்டம் வேப்பூர், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, திருப்பத்துார் மாவட்டம் நாட்றாம்பள்ளி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுார், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், துாத்துக்குடி மாவட்டம் ஏரல் என, 10 இடங்களில் 111 கோடி ரூபாயில், புதிய அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களான, ஐ.டி.ஐ.,க்கள் துவங்கப்படும்.அரசு ஐ.டி.ஐ., மாணவர்களின் கல்வி கற்றல் தரத்தை மேம்படுத்த, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்