உள்ளூர் செய்திகள்

15 தனியார் பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று ரத்து

காஞ்சிபுரம்: தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியரை ஏற்றிச் செல்லும் வேன், பேருந்து உள்ளிட்ட பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.அதன்படி காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும், தனியார் பள்ளி வாகனங்கள், காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் முன்னிலையில் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு செய்யப்பட்டன.இதில், வாகனங்களில் உள்ள இருக்கை, அவசர உதவி கதவு, முதலுதவி பெட்டி, வேகக்கட்டுபாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவை குறித்து போக்குவரத்து துறை, பள்ளி கல்வி துறை, தீயணைப்பு துறை, உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் மொத்தம், 309 வாகனங்கள் உள்ளன. இதில், நேற்று, ஆய்வுக்கு வந்த 252 வாகனங்களில், 218 வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கப்பட்டது.சிறிய குறைபாடு உள்ள 19 வாகனங்களுக்கு, குறையை சரி செய்து, வாகனத்தை திருப்பி கொண்டு வர அனுப்பப்பட்டது. இதில், ஓட்டுவதற்கு தகுதியற்ற 15 வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டு, வாகனத்தை முழுமையாக சரிசெய்து கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்