உள்ளூர் செய்திகள்

2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு

மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இயக்குநரகம் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜுலை 28ம் தேதி பொதுப் பிரிவில் மருத்துவப் படிப்பை தேர்வு செய்தவர்களும், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களும், முதல் கலந்தாய்வில் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றவர்களுக்கும் நடக்கிறது. ஜுலை 29ம் தேதி 198.50. முதல் 196.75 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜுலை 30ம் தேதி 196.75 முதல் 196.00 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி 195.75 முதல் 195.00 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி 195.00 முதல் 194.00 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி 194.00 மற்றும் 191.75, 193.00 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி 191.75 முதல் 185.25, 187.25 முதல் 177.25 வரை, 183.75 முதல் 169.25 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்