2ம் பருவ பாடப்புத்தகம் பள்ளிகளுக்கு வந்தாச்சு
கோவை: காலாண்டு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறக்கும் நாளன்றே அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க, முன்னரே புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.ஒன்று முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.முதல் நாளிலேயே வழக்கமான வகுப்புகள் நடந்ததுடன், இரண்டாம் பருவ பாடத்திட்டம் குறித்தும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மதிப்பெண்களை பதிவேடுகள், எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளும் துவங்கின.