உள்ளூர் செய்திகள்

2 சி.இ.ஓ.,க்கள் இடமாற்றம்

சென்னை: புலனாய்வு அமைப்பின் பரிந்துரைப்படி, பள்ளிக்கல்வி துறையில், முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஒ.,க்கள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவு: அரசு அங்கீகாரம் பெற்ற புலனாய்வு அமைப்பின் பரிந்துரை அடிப்படையில், தமிழக பள்ளிக்கல்வி பணியில் உள்ள, முதன்மை கல்வி அலுவலர்கள் இருவர், இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்படுகிறார். தஞ்சை முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கோவைக்கு மாற்றப்படுகிறார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்