உள்ளூர் செய்திகள்

21ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 21ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில், தமிழகத்தில் உள்ள பல்வேறு வங்கிகள், நிதி சார்ந்த நிறுவனங்கள், வாகன உற்பத்தி, காப்பீடு மற்றும் சில்லரை விற்பனை உட்பட பல்வேறு துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.எனவே, மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ பி.இ., பி.டெக், பட்டப்படிப்பு படித்தவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு முகாமில் பங்கேற்கலாம்.தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 21ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை மாடூர் டோல்கேட் அருகே உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்