உள்ளூர் செய்திகள்

210 கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்

சென்னை: கல்லூரி பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில், 210 பேர், இடமாறுதல்களை பெற்றனர். தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 5,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பொது கலந்தாய்வு முறையில், இடமாறுதல் நடக்கிறது. நடப்பாண்டிற்கான கல்லூரி பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, 5ம் தேதி துவங்கி, 8ம் தேதி முடிவடைகிறது. விருப்பப்பட்ட கல்லூரிகளில் இடமாறுதல்களை பெற, சென்னை, ராணி மேரி கல்லூரியில், பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் குவிந்தனர். முதல் நாள் கலந்தாய்வு முடிவில், 94 பேரும், இரண்டாம் நாள் கலந்தாய்வு முடிவில், 47 பேரும் இடமாறுதல்களை பெற்றனர். இந்நிலையில், மூன்றாவது நாளாக நேற்று, இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 191 பேர் விண்ணப்பித்திருந்தனர். 121 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். கலந்தாய்வு முடிவில், 69 பேர் இடமாறுதல்களை பெற்றனர். இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில், "கல்லூரி பேராசிரியர்களுக்கான மூன்று நாள் கலந்தாய்வு முடிவில், 210 பேர் இடமாறுதல்களை பெற்றுள்ளனர்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்