உள்ளூர் செய்திகள்

27ல் டி.ஆர்.பி., தேர்வு ஆலோசனை கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும், தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் அரசு பி.எட்., கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் அரசு பி.எட்., கல்லுா-ரிகளுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு, வரும், 27ல், நடக்கிறது. மாவட்டத்தில், 5 தேர்வு மையங்களில், 1,110 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், தேர்வு நாளன்று காலை, 8:30 முதல், 9:00 மணி வரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மதியம் 2:00 முதல், 2:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று, தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். கருப்பு நிற பால்பாயின்ட் பேனாவை பயன்படுத்தி மட்டும் தேர்வெழுதவும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள அசல் அடையாள அட்டை ஒன்றை தேர்வு நாளன்று கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்