289 ஆசிரியர்கள் தற்காலிக நியமனம்
முதுநிலை ஆசிரியருக்கு 18 ஆயிரம், பட்டதாரி ஆசிரியருக்கு 15 ஆயிரம், இடைநிலை ஆசிரியருக்கு 12 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொது மாறுதல் கவுன்சிலிங் அல்லது மகப்பேறு விடுப்பால் ஏற்பட்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பிக் கொள்ளலாம். இவ்விஷயத்தில் தலைமை ஆசிரியர்கள் நேரடியாக முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் வழிகாட்டுதல், முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஜூன் 1 முதல் 15 வரை மாவட்டத்தில் 289 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறுகையில், 11 ஆண்டாகியும் நேரடி ஆசிரியர் பணி நியமனம் இல்லை. பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதால் டெட் தேர்ச்சி பெற்ற பி.எட்., டிகிரி படித்தவர்களை தற்காலிக ஆசிரியராக நியமித்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்குவதால், பலரும் வர தயங்குகின்றனர். எனவே, ஆசிரியர் பணி நியமன விஷயத்தில், அரசு விரைந்து நல்ல முடிவெடுக்க வேண்டும் என்றார்.