3வது கட்ட இன்ஜி. கவுன்சிலிங் 50 சதவீத மாணவர்கள் வரவில்லை!
16ம் தேதியன்று நடைபெற்ற கவுன்சலிங்கிற்கு 2220 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பட்டிருந்தது. 1189 மாணவர்களே வந்தனர். 1031 மாணவர்கள் வரவில்லை. 17ம் தேதியன்று நடைபெற்ற கவுன்சலிங்கிற்கு 2145 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டதில் 1046 பேர் மட்டுமே வந்தனர். 1097 பேர் வரவில்லை. இதே நிலை அடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என்று தெரிகிறது. ஆகஸ்ட் 17ம் தேதி கவுன்சிலிங் மொத்தம் 20 ஆயிரத்து 315 இடங்கள் காலியாக உள்ளன. ஆகஸ்ட் 26ம் தேதியுடன் மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நிறைவு பெறுகிறது. எனவே, கவுன்சலிங் முடிவில் காலி இடங்கள் இருப்பதை இந்த ஆண்டும் தவிர்க்க முடியாது என்பதையே தற்போதையே அட்மிஷன் நிலவரம் காட்டுகிறது. ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 6.57 மணி நிலவரப்படி பிரிவு வாரியாக உள்ள காலி இடங்கள் நிலவரம்: ஓ.சி., - 2474பி.சி.எம்., - 820பி.சி.சி., - 677பி.சி., 3,297எம்.பி.சி., 3958எஸ்.சி., 8,419எஸ்.டி., 661