உள்ளூர் செய்திகள்

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொறியியல் பயன்பாட்டு மையம்

கோவை: கோவையில், பொறியியல் பயன்பாட்டு மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.தொழில், கல்வி நகரமான கோவையில் உற்பத்தி, ஆராய்ச்சி, கல்வி, தொழில் அனைத்து பிரிவினருக்கும் பயன்படும் வகையில், பொறியியல் பயன்பாட்டு மையம், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பிரமாண்டமாக விரைவில் அமையவுள்ளது.இதற்காக, கோவை அண்ணா பல்கலை வளாகத்தின் வட கிழக்கு பகுதியில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், டிட்கோ மற்றும் அண்ணா பல்கலை மண்டல வளாகம் இணைந்து, இம்மைய பொறுப்பாளர்களாக செயல்படவுள்ளனர்.இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், கட்டுமான பணி துவங்குவதற்கான குறியீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்துாரி, சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கிவைத்தார். ஒரு வாரத்தில் கட்டுமான பணிகள் துவங்கும் என, அண்ணா பல்கலையின் கோவை மண்டல வளாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்