உள்ளூர் செய்திகள்

ததும்பும் தமிழ் பெருமிதம்: முதல்வர் எழுதிய நூல் வெளியீடு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் எழுதிய, 'ததும்பும் தமிழ் பெருமிதம்' என்ற நூலை, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.தமிழ் மொழியின் செழுமைகளையும் சிறப்புகளையும், அவ்வப்போது வலியுறுத்தி, பல்வேறு நிகழ்வுகளில், முதல்வர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு, நூலாக உருவாக்கப்பட்டுள்ளது.இந்நூலில், தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ள அருங்காட்சியங்கள், புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் கண்ணாடி இழைப்பாலம் போன்ற பல்வேறு செய்திகளுடன் வண்ணப்படங்கள் இடம்பெற்றுள்ளன.தமிழுக்கான அரசாணைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலை நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் சாமிநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்