உள்ளூர் செய்திகள்

எழுத்தறிவு விகிதம் 7% அதிகரிப்பு: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதுடில்லி: உலகம் முழுதும் செப்., 8ம் தேதி எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடந்த நிகழ்வில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:நம் நாட்டில் எழுத்தறிவு பெற்றோரின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்திருக்கிறது. 2011ல் 74 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, 2023 - 24 காலக்கட்டத்தில், 81 சதவீதமாக உயர்ந்துள்ளது.எனினும், ஒவ்வொரு குடிமகனுக்கும், எழுத்தறிவு கிடைப்பது என்பது நிதர்சனமாக மாறும்போது மட்டுமே, உண்மையான முன்னேற்றம் ஏற்படும்.முழு எழுத்தறிவு எட்டிய லடாக், மிசோரம், கோவா, திரிபுரா மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களுக்கு பாராட்டுகள். அரசு, சமூகம் மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமானது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்