உள்ளூர் செய்திகள்

சொல்லிட்டு போங்க பள்ளிக்கல்வி துறையில் பணியாளர்களுக்கு உத்தரவு

சென்னை: 'பணிக்கு வரும் அனைத்து வகை பணியாளர்களும், தங்கள் அலுவலக பணியை முடித்து, மாலையில் வீட்டுக்கு செல்வதற்கு முன், தங்களின் மேலதிகாரிகளிடம் சொல்லிவிட்டு தான் போக வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக முதல்வர் விஜய், அரசு பணியாளர்களை போல, தினமும் காலை 10:00 மணிக்கு முன்பாகவே, தலைமை செயலகம் வந்து, தன் பணிகளை மேற்கொள்கிறார். அதே போல், அரசு பணியாளர்ளும், காலை 10:00 மணிக்கு, அலுவலக பணியில் இருக்க வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பு செயலர் ராமச்சந்திரன், அனைத்து அலுவலக பிரிவுகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:துறை பணியாளர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வருவதில்லை என, அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும், காலை 10:00 மணிக்கு முன்பாக அலுவலகத்துக்கு வர வேண்டும்.பணி முடித்து, மாலையில் அலுவலகத்தை விட்டு புறப்படும் போது, சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், அலுவலக உதவியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர்கள், காலை 09:30 மணிக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவறினால், தகுந்த நட வடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்