உள்ளூர் செய்திகள்

புத்தகம் படி: விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர்: திருப்போரூர் கிளை நுாலகம், வாசகர் வட்டத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியரின் 'புத்தகம் படி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில், பழமையான நுாலகங்களில் ஒன்றாக திருப்போரூர் கிளை நுாலகம் விளங்குகிறது. இந்த நுாலகத்தில் 35 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.2017ம் ஆண்டு முதல், வாசகர் வட்டம் சார்பில் பொது இடங்களில் திருக்குறள் பலகை வைத்தல், பள்ளி மாணவர்களுக்கு பல திறன் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, வாசகர் வட்டத்தின் சார்பில், ஆண்டுதோறும் “புத்தகம் படி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரிணியையும் நடத்தப்படுகிறது.அந்த வகையில், வாசகர் வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமையில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்