பர்த்டே கொண்டாடிய ஆசிரியையிடம் விசாரணை
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே நெடுங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியை ராணி, கடந்த, 26ல் வகுப்பறையில் மாணவ, மாணவியர் முன்னிலையில், 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.அப்போது மாணவியரிடம், முத்தம் கேட்டு பெற்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து அப்பள்ளியில், ஆசிரியை ராணியிடம், சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள் விசாரித்தார்.இதுகுறித்து பெருமாளிடம் கேட்டபோது, ''தலைமை ஆசிரியர் விடுமுறையில் உள்ளார். அதனால் நாளை(இன்று) விளக்கம் அளிக்க, ஆசிரியை ராணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.