உள்ளூர் செய்திகள்

4 நாட்களில் வராதவர்களின் எண்ணிக்கை 3745

நான்கு நாட்களில் மொத்தம் 16,835 பேர் அழைக்கப்பட்டு, அவர்களில் 13,008 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். 3,745 பேர் வரவில்லை. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 82 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 22.25%. நான்காவது நாளில் மட்டும் 4,936 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 1,083 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 15 பேர். இறுதியில், 3,838 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 21.94%. தொழிற்பிரிவு கவுன்சிலிங் தொழிற்பிரிவு பொது கவுன்சிலிங்கில், 2 நாட்களில் மொத்தம் 608 பேர் அழைக்கப்பட்டு, 560 பேர் ஒதுக்கீடு பெற்றனர். வராதவர்களின் எண்ணிக்கை 47 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் எண்ணிக்கை 1. யாரும் நிராகரிக்கப்படவில்லை. மொத்த ஆப்சென்ட் விகிதம் 7.73%.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்