40 கல்லுாரிகள் முன் கண்காணிப்பு கேமரா
கோவை: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக, 40 கல்லுாரிகளின் முன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பெண்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பான கோவை(சகோ) திட்டத்தை கோவை மாநகர போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். திட்டத்தின் வாயிலாக மாநகரின், 200 பஸ் ஸ்டாப் நிழற்குடைகளில், கண்காணிப்பு கேமரா, அவசர கால அழைப்பு பட்டன்(எஸ்.ஓ.எஸ்.,) நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.திட்டத்தை மேம்படுத்தும் விதமாக அனைத்து பள்ளி, கல்லுாரிகளின் நுழைவாயிலில் கேமராக்களை பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 40 கல்லுாரிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த, மாநகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.அதன்படி, கல்லுாரி நிர்வாகத்தினரே கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்களில், இந்நடவடிக்கையை மேற்கொள்ள போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.