5 பிரிவுகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்: ஜி20 மாநாட்டு தலைவர்களுக்கு பரிந்துரை
ஜி-20 நாடுகளின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கும், டபிள்யூ 20 எனும் பெண்கள் உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் துவங்கியது. அதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டபுள்யூ 20 கம்யூனிக் என்ற அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ஐந்து பிரிவுகளில் பெண்கள் மற்றும் சிறுமியருக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்:காலநிலை மாற்றம்காலநிலை குறித்து முடிவெடுக்கும் வழிமுறைகளில், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மற்றும் உபயோகமான பங்கேற்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். பெண்கள் தலைமையிலான திட்டங்களுக்கு, நேரடி நிதியுதவி அளிக்க வேண்டும்.தொழில் முனைவுகிராமப்புறங்கள் மற்றும் குக்கிராமங்களில் பல்வேறு சட்டம், கொள்கை, நடைமுறை, ஒழுங்குமுறை, சமுதாய மற்றும் சமூகத் தடைகள் பெண்களுக்கு உள்ளன. அத்துடன் மூலதனம் மற்றும் நிதிச் சேவைகள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். பெண் தொழில் முனைவோருக்கு நிதி, பிணை வைப்பு மற்றும் மூலதனத்திற்கான வசதியை அதிகரிப்பதன் வாயிலாக அவர்களை ஊக்குவிக்க முடியும்.பாலின மின்னணு பிரிவுபெண்கள் மற்றும் சிறுமியர், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மொழிகள் புரிந்து அவற்றை அணுகுவதற்கும், பயன்படுத்துவதற்கும் தடைகளை எதிர்கொள்கின்றனர். இந்த இடைவெளியை குறைப்பதன் வாயிலாக, சமூக மற்றும் பொருளாதார ஆதாயங்கள், வாழ்வாதாரம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அதிகரிக்கும். டிஜிட்டல் பொருளாதாரத்தில், பெண்கள் முக்கிய பங்கேற்பாளர்களாகவும், முடிவெடுப்பவர்களாகவும் இடம்பெற ஜி20 தலைவர்கள் உறுதியளிக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனம் துவங்கும் பெண்களுக்கு, குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் அதற்கு இணையான ஊக்கத்தொகை வழங்க வேண்டும்அடிமட்ட தலைமைபெண்கள் தலைவர்களாக வருவதும், வழிநடத்துவதும் மற்றும் மாற்றத்தின் முகவர்களாக இருப்பதும், மிகவும் சிக்கலானது. அரசுகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்கள், பெண்களின் அடிமட்ட தலைமையை ஊக்கிவிக்க வேண்டும். பெண்களின் தலைமை பண்பை ஊக்குவிக்க, அனைத்து இடங்களிலும், மூன்றில் ஒரு பங்கு என்ற இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் 2030க்குள் 50 சதவீதம் அடிமட்ட தலைவர்கள் என்ற இலக்கை அடைய முடியும்.கல்வி, திறன் மேம்பாடுஅமைதியான சமத்துவம் மற்றும் வளமான சமுதாயத்திற்கு, பெண்கள் கல்வி கற்பது அவசியம். உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் அனைத்து இடங்களிலும் பாலின வன்முறையில் இருந்து விடுதலை அளிப்பதற்கான உத்தரவாதம் ஆகியவற்றின் வாயிலாக, பெண்களின் பொருளாதார பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் அளித்து ஊக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.மகளிர் உதவி குழு தயாரிப்புகள்இம்மாநாட்டில், தமிழக மகளிர் சுய உதவிக் குழுவினர் காட்சிப்படுத்திய தயாரிப்புகளுக்கு வரவேற்பு கிடைத்தது.இயற்கை மற்றும் பாரம்பரியம் சார்ந்து உருவாக்கப்பட்ட கற்சிலை, சுடுமண் பொம்மைகள், குரும்பர் ஓவியம் உள்ளிட்டவற்றை, அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மாநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டனர். பெண்களின் தொழில் ஆர்வம், சுய முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. அதில், தண்டரை பகுதி, இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பின் செயலர் செல்வி, தங்கள் அமைப்பின் பெண்கள், பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மூலிகை மருந்துகள் தயாரிப்பது மற்றும் அவற்றை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டுவது குறித்து விளக்கினார். கண்காட்சியை பார்வையிட்ட மாநாட்டு பிரதிநிதிகளுக்கு, தேன் மிட்டாய், கடலை மிட்டாய், சீடை, தட்டை, முறுக்கு உள்ளிட்ட பாரம்பரிய நொறுக்கு தீனிகள் வழங்கப்பட்டன.