உள்ளூர் செய்திகள்

50 கோடி கையெழுத்து பெற்றாலும் நீட் தேர்வை ஒழிக்கவே முடியாது

சேலம் மாவட்டம் ஆத்துார் வடக்கு, தே.மு.தி.க., ஒன்றிய செயலர் பச்சமுத்துவின் மகன் பூவரசன் - ஷாலினி திருமண விழா நடந்தது. அதில் மணமக்களை வாழ்த்திய பின் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க.,வுக்கு ஏன் ஓட்டுப்போட்டோம் என மக்கள் புலம்புகின்றனர். இதற்கான விளைவு, வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு தெரியும். நீட் தேர்வு ரத்துக்கு தி.மு.க., 50 லட்சம் கையெழுத்து இல்லை, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் நீட் தேர்வை ஒழிக்கவே முடியாது. அரசியல் ஆதாயத்துக்கு மாணவர்களை, தி.மு.க., குழப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்