66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி!
புதுடில்லி: 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.கலை, சமூகசேவை, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.நடப்பாண்டில் இந்த விருதுக்கு தேர்வானோரின் விவரங்கள் ஜன., 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 66 பேருக்கு (பத்ம விபூஷண் 2, பத்ம பூஷண் 6, பத்மஸ்ரீ 58) ஆகியோருக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் 7 பேர் தமிழர்கள் ஆவர்.இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விருது பெற்றவர்களின் விவரம்:பத்மவிபூஷண் விருது:தர்மேந்திர சிங் தியோல் - கலை (திரைப்படம்) - நடிகர் தர்மேந்திரா மறைந்துவிட்டதால் அவரின் மனைவி ஹேமமாலினி விருதை பெற்றுக் கொண்டார்)என். ராஜம் - கலை (வயலின்)பத்மபூஷண் விருது:டாக்டர் கணேஷ்பகத் சிங் ஹோஷ்யாரிஉதய்சுரேஷ்குமார் கோடக்விஜய்குமார் மல்ஹோத்ராடாக்டர் கே.ஆர். பழனிசாமிபியூஷ் பாண்டேபத்மஸ்ரீ விருது:விஷ்வபந்துபரத்சிங் பாரதிடகாராம் பீல்ஹர்மன்ப்ரீத் கவுர் புல்லர்ரதிலால் மோகன்லால் போரிசாகர்குமார் போஸ்ஜனார்த்தன் பாபுராவ் போத்தேசுவாமி பிரம்மதேவ்ப்ரோஷன்ஜித் சேட்டர்ஜிதேவகி அம்மாராம்சந்த் கோட்போலே, சுனிதா கோட்போலேதேச்சி குபின்ஹெச். வி. ஹண்டே (தமிழ்நாடு)கப்ருதின் சேவாதி ஜோகிமிர்ஹாஜி காசம்ரகுவீர் கேட்கர்கிருஷ்ணன் கிட்னா (தமிழ்நாடு) - (விருதாளர் மறைவு காரணமாக சுசிலா கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்)பேராசிரியர் லார்ஸ் கிருஷ்டியன் கோச்மாமிடாலா ஜக்தீஷ்குமார்பிரவீண்குமார்கே. விஜயகுமார் (தமிழ்நாடு) - முன்னாள் டி.ஜி.பி.,ஸ்ரீரங்தேவ்பா லாட்அன்கேகோடாசரோஜ் மண்டல்புத் ரஷ்மி மணிநிலேஷ் வினோத்சந்திர மாண்ட்லேவாலாமகேந்திரகுமார் மிஸ்ராதிரிப்தி முகர்ஜிஹரிமாதவ் முகோபாத்யாய்சத்யநாராயண் நந்த்லால் குவால்பழனிவேல் (புதுச்சேரி) - பிரதமர் மோடி முன் சாஷ்டாங்கமாக வணங்கி பின்னர் விருதை பெற்றார்.தார்மிக்லால் சுனிலால் பாண்ட்யாகைலேஷ் சந்திரபண்ட்கரிமேலா பாலகிருஷ்ண பிரசாத்ராஜேந்திர பிரசாத்குண்டூரு வெங்கட்ராவ்தீபிகா ரெட்டிபல்கொண்டா விஜய் ஆனந்த் ரெட்டிஹரிசரண் சைகியாவேம்படி குடும்ப சாஸ்திரிஷபி ஷாவுக்பல்தேவ் சிங்யும்னான் ஜத்ராசிங்அசோக்குமார் சிங்சிவசங்கரி (தமிழ்நாடு)ஸ்ரீதர்ஷ்யாம் சுந்தர்சுசீலம்மாசுவாமிநாதன் (தமிழ்நாடு)கேவல்கிருஷ்ணன் தக்ரால்கோபால்ஜி ரிரிவேதிஅர்விந்த் வைத்யாஜெய்பூர் பாசிநாராயண் வியாஸ்கம்பீர்சிங் யோன்சோனாஹாலி வார்