அக்.,7 இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா
சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா அக்.,7ம் தேதி சென்னை செம்மஞ்சேரி வளாகத்தில் நடக்கவுள்ளது.இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் அமெரிக்காவிற்கான இந்திய தூதுவருமான ஐ.எப்.ஸ் (ஓய்வு) ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.இவ்விழாவில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் ஆறு வளாகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கல்வி நிறுவனங்களின் நான்கு பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 1974 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இவ்விழாவில் நான்கு பேர் முனைவர் பிரிவிலும் ஒருவர் முனைவர் (ஆராய்ச்சி) பிரிவிலும் பட்டங்கள் பெறுகின்றனர்.