உள்ளூர் செய்திகள்

9 ம் வகுப்பு முதல் இலவச சைக்கிள்:தங்கம் தென்னரசு தகவல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது:பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இல்லாமல், சமச்சீர் கல்வித் திட்டம் வரவுள்ளது. இலவச சைக்கிள் திட்டம் பிளஸ் 1ல் வழங்கப்படுவதால், இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுகிறது.ஒன்பதாம் வகுப்பு முதல் வழங்கினால், நான்கு ஆண்டுகளுக்கு பயன்படும் என்ற கருத்து, முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனே பரிசீலித்து அதுபோன்றே செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அனைத்துப் பள்ளிகளிலும் டைப்பிங் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட அளவில் 10ஆம் வகுப்பில் 480க்கு மேல் மதிப்பெண் பெற்ற 37 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்