ரூ.90 லட்சத்தில் திட்டங்கள் துவக்கம்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, மாடம்பாக்கம் தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் வசதிக்காக, கல்வி நிதியின் கீழ், 60 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.சேலையூர் - அகரம்தென சாலையில், நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 30 லட்சம் ரூபாய் செலவில், எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில், புதிதாக எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.இவற்றை பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. இதில், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., - டி.ஆர்.பாலு பங்கேற்று, திட்டங்களை துவக்கி வைத்தார்.