உள்ளூர் செய்திகள்

அறிவிப்பு

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதுவோர் ஊக்கத்தொகை பெறுவதற்காக, தமிழக அரசு அறிவித்துள்ள மதிப்பீட்டுத் தேர்வுக்கு, இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு, செப்., 10ல் நடத்தப்படும். விண்ணப்பிக்க, ஆக., 17 கடைசி நாள். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்._____________தமிழக அரசு வழங்கும், 2023ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது பெற, தி.க., தலைவர் வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்._____________மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழகத்தில் இரண்டு ஆண்டுகள் கொரோனா காலத்தில் பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக நியமிக்கப்படும் போது அவர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண் வழங்கப்படும்._____________சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம், தான்சானியா நாட்டின் சான்சிபார் நகரில், தன் கிளையை துவக்கி உள்ளது. இங்கு, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நான்காண்டு இளங்கலை; இரண்டாண்டு முதுகலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர, 5ம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, zanzibar.iitm.ac.in என்ற இணையத்தை பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்