பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: ஆக.,1 பெறலாம்
சென்னை: ஆக.,1 முதல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் தங்களது பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம்.கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள், மறு கூட்டல், மறு மதிப்பீடு ஆகியவற்றிற்கு விண்ணப்பித்த மாணவர்களும் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.