வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பைப்தான் குடுப்பாங்க... தண்ணீர் வராது. மாநில அரசுகளை கை காட்டிருவாங்க.
சென்னை: மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள, 1.07 கோடி வீடுகளுக்கு தனி குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி, நிறைவு பெற்றுள்ளது.நாடு முழுதும் உள்ள கிராமப்புற குடியிருப்புகளுக்கு தனி குழாய்கள் வாயிலாக, குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள, 1.25 கோடி வீடுகளுக்கு தனி குடிநீர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் நிதியை பகிர்ந்து வருகின்றன. இதுவரை 3,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், நீர்தேக்க தொட்டிகள் கட்டுதல், குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 1.07 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி நிறைவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி, தமிழகத்தில் 85.8 சதவீத அளவிற்கு பணிகள் முடிந்துள்ளன. அதே நேரத்தில், உத்தர பிரதேசம் மாநிலத்தில், 84.8; கர்நாடகாவில், 78.5; ஆந்திராவில் 73.4; கேரளாவில் 53.5; ராஜஸ்தானில் 52.6; மேற்கு வங்கத்தில் 52 சதவீதம் அளவிற்கு பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல மாநிலங்களில் பணிகள் முடிந்தாலும், முழுமையாக குடிநீர் கிடைக்கவில்லை. குடிநீர் ஆதாரங்களை உருவாக்காமல், குடிநீர் இணைப்புகளை வழங்கியதே இதற்கு காரணம்.தமிழகத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. எஞ்சியுள்ள வீடுகளுக்கும் குறுகிய காலத்தில் குடிநீர் இணைப்புகளை வழங்க முடியும்.குடிநீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கு, கூட்டு குடிநீர் திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ளன. எனவே, பணிகளை முடிக்க, மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது.இவ்வாறு கூறினார்.
பைப்தான் குடுப்பாங்க... தண்ணீர் வராது. மாநில அரசுகளை கை காட்டிருவாங்க.