| ADDED : ஆக 25, 2024 04:42 AM
மறைந்த முலாயம் சிங் யாதவ், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை ஆரம்பித்தவர். தற்போது, அவருடைய மகன் அகிலேஷ் யாதவ் கட்சியை வழிநடத்துகிறார்; தற்போது, 'இண்டி' கூட்டணியில் உள்ளார்.தி.மு.க., எப்படி கருணாநிதியை முன்வைத்து அரசியல் நடத்துகிறதோ, அதை போல தன் தந்தை முலாயம் சிங் யாதவை வைத்து, அரசியல் நடத்துகிறார் அகிலேஷ்.டில்லியில் சமாஜ்வாதி கட்சிக்கு, பெரிய அலுவலக கட்டடம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்கு, ஒரு பெரிய அறையில் முலாயம் சிங்கின் சிலை நிறுவப்பட உள்ளதாம்; கட்சி அலுவலகத்திற்குள் செல்லும் முன், கட்சி நிறுவனர் முலாயம் சிங்கை வணங்கிவிட்டு, உள்ளே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உ.பி., சட்டசபைக்கு 2027 மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடைபெறும். அப்போது காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றும் ஆசையில் உள்ளார் அகிலேஷ். இதற்கு மறைந்த தன் தந்தை உதவ வேண்டும் என விரும்புகிறாராம். அதற்குத் தான் அவருடைய சிலை நிர்மாணிக்கப்படுகிறதாம்.