உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இபிஎஸ் மீது அண்ணாமலை விமர்சனம்: அமைதி காத்த மா.செ.,க்கள் மீது அதிருப்தி

இபிஎஸ் மீது அண்ணாமலை விமர்சனம்: அமைதி காத்த மா.செ.,க்கள் மீது அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, போராட்டங்கள் நடத்தாமல், பெரும்பாலான அ.தி.மு.க., மாவட்டச்செயலர்கள் மவுனம் காத்தது, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் கடந்த 25ம் தேதி பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசும்போது, 'என்னை பற்றியும், கட்சி குறித்தும், பழனிசாமி சில கருத்துக்களை கூறியுள்ளார். அதற்கு நான் கருத்து சொல்ல வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=evv316ad&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை பிடித்தவர் பழனிசாமி. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நடத்திய கட்சியை, இன்று கிணற்று தவளைகள் வழி நடத்தி கொண்டிருக்கின்றன' என்று பேசியதுடன், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை தற்குறி எனக் கூறி கடுமையாக வசைபாடினார். அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசையும், 'தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம்' என்று அண்ணாமலைக்கு அறிவுரை சொல்வது போன்று கருத்துச் சொன்னார்.ஆனால், அ.தி.மு.க., தலைவர்கள் அதிகம் எதிர்வினையாற்றவில்லை. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, உதயகுமார், செல்லுார் ராஜு, கடம்பூர் ராஜு, ஜெயகுமார் உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.மதுரை, சிவகங்கை உட்பட சில மாவட்டங்களில், அண்ணாமலை உருவ பொம்மையை, அ.தி.மு.க.,வினர் எரித்தனர். ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், அண்ணாமலைக்கு எவ்வித எதிர்ப்பும் காட்டப்படவில்லை.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, பல மாவட்ட செயலர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்ட பின், சிலர் பெயரளவிற்கு எதிர்ப்பு போராட்டத்தை பதிவு செய்துள்ளனர். மூத்த தலைவர்கள் பலரும், இப்படியொரு சம்பவமே நடக்காதது போல அமைதியாக இருந்து விட்டனர். இது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.'இதே நேரம் ஜெயலலிதா குறித்து பேசி இருந்தால், கட்சி நிர்வாகிகள் இப்படி அமைதியாக காப்பார்களா; மாவட்டச்செயலர்கள் ஒவ்வொருவரும் மீதும், ஏராளமான புகார்கள் வந்தும், அவர்கள் பதவியில் தொடர அனுமதித்தேன். ஆனால், அவர்கள் என்னைப் பற்றி தவறாக விமர்சித்த, அண்ணாமலைக்கு எதிராக போராட தயங்குகின்றனரே' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்.அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க.,வுக்கு என்றும் எதிரி கட்சி தி.மு.க.,தான். அதற்கு எதிராகத்தான் களமாட வேண்டும். அதை விடுத்து மற்ற கட்சிகளுடன் பகைமை பாராட்டுவது சரியல்ல என்பது, கட்சியின் மூத்த தலைவர்கள் எண்ணம். தி.மு.க.,வை விடுத்து, கட்சி தலைமை பா.ஜ., உடன் மோதுவதை, பெரும்பாலானோர் ரசிக்கவில்லை.இதன் காரணமாக, அண்ணாமலை கடுமையாக பழனிசாமியை விமர்சித்தபோதும், அமைதியாக இருந்து விட்டனர். இது, பொதுச்செயலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தவிரவும் தற்போதைய நிலையில், மூத்த தலைவர்கள் இடையே சுமூகமான உறவு இல்லை. இதுவும் அண்ணாமலைக்கு எதிராக பலரும் கொந்தளிக்காததற்கான காரணங்களில் ஒன்று.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Vasudeva
ஆக 31, 2024 07:14

தன்னை பலப்படுத்திக்கொள்ளாமல் எதிரி எப்போ பலவீனமாவான் என்று எதிர்பார்த்து எதுவுமே செய்யாமல் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்


Mahendran Puru
ஆக 31, 2024 06:33

படிக்கப் போயிருக்கும் நேரத்தில் அவர் இடத்தை நிரப்ப ஆறு பேர் கொண்ட குழுவை நியமித்ததுள்ளார் கிரிக்கெட் வீரர் ஜெ ஷாவின் தந்தை. இந்த நேரத்தில் பிரச்சினை வேண்டாமென முடிவெடுத்துள்ளார்களோ


SP
ஆக 30, 2024 21:48

தனக்கு செல்வாக்கு இல்லை என்பதை இனியாவது உணர்ந்து திமுக எதிர்ப்பில் உறுதிி காட்டவேண்டும்


G.Balakrishnan
ஆக 30, 2024 18:33

எடப்பாடி ஒன்றும் ஜே ஜெயலலிதா நோ


Jysenn
ஆக 30, 2024 14:28

Ivan oru taleevar. Velangum.


S.L.Narasimman
ஆக 30, 2024 13:02

,நல்ல பல திட்டங்களை தந்து திறம்பட ஆட்சி செய்தவர் எடப்பாடியார் . DMK பைலை 1, 2,3 4ன்னு கதை விட்டு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அதே கூட்டத்தொடு சேர்ந்து கும்மி அடிக்கும் டுபாக்கூர் அண்ணாமடை


Sathyanarayanan Sathyasekaren
ஆக 30, 2024 23:35

நரசிம்மன் திராவிட கட்சியில் இருந்தால் இப்படி தான் இருக்கவேண்டுமா? உண்மையை பேசவே மாடீர்களா கொத்தடிமைகளே . 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் செத்துப்போன பாம்பாக இருந்த திமுகவிற்கு தனது ஈகோ காரணமாக பிஜேபி உடன் முரண்டு பிடித்து ஆட்சியை தாரைவார்த்தவர் எடப்பாடி என்ற சுயநல காரன் என்ற உண்மை இன்னும் உங்களுக்கு புரியவில்லையா?


மோகனசுந்தரம்
ஆக 30, 2024 09:14

எதிரியை நம்பலாம் இவனைப் போன்ற துரோகியை ஒருக்காலும் நம்ப முடியாது. நம்புகிறவர்களின் முதுகில் குத்து பவன்.


metturaan
ஆக 30, 2024 07:38

அரசியல் அகராதியில் யார் எப்படி பதவிக்கு வந்தார் என்பதை விட எப்படி செயல்பட்டனர் என்பதே பார்க்கப்படும்.. அந்த வகையில் எடப்பாடியார் சிறப்பாக செயல்பட்டார் என்பதே என் கருத்து.... ஒரே விஷயம் அஇஅதிமுக வில் தலைமைவகித்த புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி இருவருக்கும் இருந்த செல்வாக்கு & ஆளுமை இவருக்கு நிச்சயம் குறைவு... இதை உணர்ந்து கொண்டு சிதறிக்கிடக்கும் இயக்கத்தை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொண்டு சற்று யோசித்து செயல்பட்டால் மிக நிச்சயமாக மீண்டும் பதவியில் அமர முடியும்...


Murugesan
ஆக 30, 2024 13:15

நம்பர் ஒன் நயவஞ்சக எட்டப்பன் எடப்பாடி அதிமுகவை தன் சுயநலத்திற்காக திருட்டு திமுக விடம் அடகு வைச்ச ஊழல்வாதி ,இரண்டு கட்சியில இருக்கிற அத்தனை அமைச்சர்கள் மா செ அயோக்கியனுங்க


ramani
ஆக 30, 2024 07:02

விரைவில் அதிமுக மூடுவிழா நடத்தப்படும். இனி வாழ்வாதாரம் இல்லாத காங்கிரஸ் போன்று ஆகிவிடும்


முக்கிய வீடியோ