உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்: கவர்னர் - முதல்வர் மீண்டும் மோதல்

எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்: கவர்னர் - முதல்வர் மீண்டும் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு விவகாரத்தில், கவர்னருக்கும் முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் துவங்கி உள்ளது.தமிழக சட்டசபையில் நிறைவேற்ற அனுப்பப்பட்டுள்ள முக்கிய மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழில், கவர்னர் ரவி குறித்த தலையங்கம் வெளியானது.அதை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'கவர்னர் தன்னிச்சையாக செயல்பட்டு, சட்டசபையின் மாண்பையும், மதிப்பையும் குறைக்கிறார். பதவியில் தொடர அவருக்கு தார்மீக அதிகாரம் இல்லை' என கூறியிருந்தார்.அதற்கு கவர்னர் மாளிகை அளித்த பதிலில், 'அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதல்வர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தன் முழுமையான நிர்வாக தோல்வியை மறைக்க பயன்படுத்தி இருப்பது பரிதாபத்துக்குரியது' என, கூறப்பட்டுள்ளது.அதற்கு பதில் தரும் வகையில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் கவர்னர், டில்லியில் உள்ள உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கிய பதவியை, அரசியல்மயமாக்கி கொண்டுள்ளார்.கவர்னர் வரும் முன்பே, தமிழகம் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளது.தமிழகத்திற்கு எது சிறந்தது என, எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக, அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

N Ravi
பிப் 16, 2025 20:23

நம்ம மூதழ்வறு றொம்ம நழ்ழ மநுஷன் ஆன கூட இறுக்கும் மநுஷனுக மோசமான...


sankar
பிப் 16, 2025 13:41

பாடம் எடுத்தாப்ல புரிஞ்சுருமா


c.mohanraj raj
பிப் 15, 2025 22:47

ஆளுநருக்கு கொம்பா முளைத்துள்ளது 200 ரூபாய் ஊட்டி அப்படி என்றால் சீப் மினிஸ்டர் மட்டும் கொம்பா மூளை உள்ளது அல்லது வால் முளைத்துள்ளதா அவர் யாரிடமும் போய் ஓட்டு பிச்சை எடுக்க வேண்டியது இல்லை ஆனால் நீ ஐந்து வருடத்திற்கு ஒருமுறை காலில் விழுந்தே தான் ஆக வேண்டும் அதில் கவர்னர் கெத்தாக நிற்கிறார் அவர் தவறானவர் சொத்து சேர்த்துள்ளார் என்று ஓர் இடத்திலாவது எவனையாவது கைநீட்டி சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்


h
பிப் 15, 2025 20:59

bharthi peyar vacuum avar perai kedukka vanduttan


PARTHASARATHI J S
பிப் 15, 2025 20:08

கவர்னர் ஸ்டாலினை அரசியல் ரீதியாக வெளுத்து வாங்குவது சிறப்பு. மிக மிக மோசமான ஆட்சி நடத்துகிறார். ஆணவம். மக்களும் மூளைச்சலவை செய்துள்ளார். கடவுளின் மிகப்பெரிய கொடிய தண்டனை இந்த கருணா குடும்பத்திற்கு வரும். துர்கா ஸ்டாலின் எத்தனை கோவிலுக்கு போனாலும் பிரயோசனமில்லை.


Mahendran Puru
பிப் 15, 2025 19:22

கவர்னர் அந்தப் பதவியின் மாட்சிமையை எப்படியும் குறைப்பேன் என்கிறாரே கேரளாவில் ஒருவர் டிரான்ஸ்பரில் பிகார் போய்விட்டார். வங்காளத்தில் ஒரு பாலியல் குற்றவாளி immunity clauseஐ வைத்து தப்பித்து பதவியில் தொடர்கிறார். இந்த பாஜக ஆட்கள் எல்லாமே ஒரு தினுஸு தானப்பா.


V வைகுண்டேஸ்வரன், Chennai
பிப் 15, 2025 21:50

யோவ் மஹேந்திரா 200 ரூவா ஊ ஃபீஸ், அந்த சார் மற்றும் அந்த கார் யாருன்னு சொல்லு


raja
பிப் 15, 2025 18:15

அட அந்த தத்தி பயலுக்கு ரோஷம் மட்டும் வரும். பேப்பரை பார்த்து படிக்க வக்கில்லை, பாடம் நடத்த கூடாதாம்....


Parthasarathy Badrinarayanan
பிப் 15, 2025 15:23

ஆம். புரியும் அறிவிருப்பவர்களுக்குப் பாடம் நடத்தலாம். கவர்னரின் ஆலோசனைக் குழுவுக்கு பாடம் நடத்தலாமா?


CHELLAKRISHNAN S
பிப் 15, 2025 14:22

absolutely correct. totally unfit to read.


Barakat Ali
பிப் 15, 2025 13:51

படித்தவர்களை, பொறுப்பானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டால் அவதிதான் ......


சமீபத்திய செய்தி