வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சின்னசாமி பணம் சுருட்டுவதில் பெரிசாமி aaayittar.
''அடடே... வாங்க்கா. என்ன திடீர் விசிட்,'' சித்ராவை வரவேற்றாள் மித்ரா.''பேங்க்'ல ஒரு சின்ன வேலை; முடிச்சுட்டு, அப்படியே பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன். குடிக்க தண்ணி கொடு,'' என்றாள் சித்ரா. தண்ணீரை மித்ரா கொடுக்க, 'மடக்மடக்'கென குடித்துவிட்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் சித்ரா.''ரெண்டு நாளைக்கு முன்னாடி தேசிய விளையாட்டு தினம் வந்துச்சுல்ல; திருப்பூர் சிக்கண்ணா காலேஜில இருக்கற விளையாட்டு மைதானத்துக்கு போன கலெக்டரு, அங்க விளையாடிட்டு இருந்தவங்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு, கைகுலுக்கிட்டு வந்திருக்காரு,''''அங்க, 18 கோடி ரூபா செலவுல, திறந்தவெளி மைதானம் கட்ற வேலை நடந்துட்டு இருக்கு; இதுல, 9 கோடி ரூபாயை கலெக்டரு தான், 'லோக்கல் பண்ட் ஸ்கீம்'ல ஒதுக்கணுமாம். ஆனா, அந்த பணம் இல்லாததால, வேலை பாதியில நிக்குதாம். அதைபத்தி கலெக்டரு கண்டுக்கவே மாட்டேங்கறார்ன்னு, அங்க இருக்கறவங்க புலம்பியிருக்காங்க,'' என்றாள் மித்ரா. 'பலே' கூட்டணி!
''அவங்க ஆதங்கமும் சரிதானே. இது தெரிஞ்சா கண்டிப்பா பண்ட் கொடுத்துடுவாரு...'' என்ற சித்ரா, ''மண் கடத்தல்விவகாரத்துல, பி.ஜே.பி., - கம்யூ., கட்சிக்காரங்களும் இணக்கமா இருக்கிறதா பேசிக்கிறாங்க'' என பேச்சை மாற்றினாள் சித்ரா.''அப்படியா...'' ஆச்சர்யத்தில் கேட்டாள் மித்ரா.''சிட்டியில நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோடு வேலை நடக்கிற இடத்துல இருந்து மண்ணை எடுத்து வந்து காங்கயம் ரோட்ல இருக்கற ஒரு இடத்துல குவிச்சு வச்சிருந்தாங்களாம். அந்த மண்ணை மண் கடத்தல் கும்பலை சேர்ந்த சிலரு, 'ஆட்டய' போட்டுட்டு போறாங்கன்னு, அங்க இருக்கற சில இளைஞர்கள் போலீஸ்கிட்ட புகார் சொல்லியிருக்காங்க,''''அதோட விடாம, மண் எடுத்துட்டு போன லாரியை மடக்கி பிடிச்சிருக்காங்க. இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக, விவகாரத்தை பெரிசு பண்ண வேணாம்; அப்படியே விட்டுடுங்கன்னு, தோழர் கட்சியை சேர்ந்த ஒருத்தரு சிபாரிசு பண்ண, விவகாரத்தை அப்படியே கண்டுக்காம விட்டுட்டாங்களாம். மண் எடுத்துட்டு வந்த லாரி ஓனரு,பி.ஜே.பி.,காரருன்னு சொல்றாங்க மித்து,'' என்றாள் சித்ரா. அடக்கி வாசிக்கிறாங்க...
''ஒரு சினிமாவுல கவுண்டமணி சொல்ற மாதிரி, ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணுமாம்ன்னு சொல்ற மாதிரி தோழர்களோடு நடவடிக்கை இருக்கும் போல...'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.''சிட்டிக்குள்ள பல இடங்கள்ல ஸ்மார்ட் ரோடு வேலையில தரமில்லையாம்; சாக்கடை, தெரு விளக்குப் பிரச்னைன்னு, ஏகப்பட்ட பிரச்னை இருக்காம். வரியெல்லாம் உயர்த்தப்பட்டதால பொதுமக்கள் ரொம்ப 'அப்செட்'ல இருக்காங்களாம். இதை பத்தி தோழர்கள் கண்டுக்கிறதே இல்லையாம்,''''கார்ப்பரேஷன், 43வது வார்டு பூச்சக்காட்ல ஒரு மாசமா தெருவிளக்கு எரியாம இருந்திருக்கு. மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினாங்க. இதனை ஏற்பாடு பண்ணதே தோழர்கள் தானாம். ஆனா வெளிய காட்டிக்காம, பொதுமக்களே பண்ண மாதிரி 'செட்டப்' பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''கூட்டணியில இருந்தாலும், பொதுமக்கள் பிரச்னைக்கு அவங்க வலுவா குரல் கொடுப்பாங்க. இப்போ ஏன் இப்படி அடக்கி வாசிக்கிறாங்கன்னு தெரியலையே,'' சந்தேகம் கிளப்பினாள் சித்ரா. ஆக்கிரமிப்பு 'அட்ராசிட்டி'
''பல்லடம் - குடிமங்கலம் பக்கத்துல சோமவாரப்பட்டி ஊராட்சி, பெதப்பம்பட்டி நால்ரோட்ல, ஊராட்சி சார்பில் திடீர்ன்னு ஒரு கழிப்பிடம் கட்ற வேலையை துவக்கியிருக்காங்க. அந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதாம். அங்க எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு, நெடுஞ்சாலைத்துறையினரும் லெட்டர் கொடுத்திருக்காங்களாம். ஆனா, இந்த விவகாரத்துல ஒரு உள்குத்து இருக்குதாம்,'' என மூச்சுவிட்ட சித்ரா தொடர்ந்தாள்.''ஊராட்சி வி.ஐ.பி., அங்க இருக்கற ஒரு தனியாருக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு கேட்டிருக்காரு. ஆனா, அந்த லேண்ட் ஓனர், நிலத்தை விற்க முடியாதுன்னு சொல்லிட்டாரு போல. அவருக்கு நெருக்கடி தர்ற மாதிரி, அந்த இடத்துக்கு பக்கத்துல இருக்கற நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்துல, கழிப்பறை கட்ற வேலையை துவக்கியிருக்காங்கன்னு ஒரு பேச்சு ஓடுதுடி...'' என முடித்தாள் சித்ரா.''என்ன சித்துக்கா இப்படியெல்லாம் பண்றாங்க. கழிப்பிடம் கட்ட ஊராட்சியோட அனுமதி மட்டும் போதாதுல்ல; யூனியன் ஆபிசர், கலெக்டருக்கிட்டயும் அனுமதி வாங்கனும்ல; அவங்க அனுமதியோட தான் வேலை நடக்குதா...'' என, நியாயம் கேட்டாள் மித்ரா.''தெரியல மித்து. என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்,'' என்றாள் சித்ரா, ''அக்கா... பூண்டி போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல, ஹெல்மெட் போடாம, லைசென்ஸ் இல்லாம டூவீலர்ல வந்த ஒரு ஸ்டூடன்ட்கிட்ட, 700 ரூபா வாங்கிட்டு, அனுப்பிட்டார்ன்னும் பேசினோம்ல. இது சம்மந்தமா, பெரிய ஆபீசர், குட்டி ஆபீசரை கூப்பிட்டு, 'என்கொயரி' பண்ணி, 'செம டோஸ்' விட்டிருக்காரு. பனிஷ்மென்டா, ஸ்டேஷன் வாசல்ல நிற்கிற 'சென்டரி' வேலை கொடுத்துட்டு, 'வார்ன்' பண்ணி விட்டுட்டாங்களாம்'' என்றாள். 'ஏழரை கூடிடுச்சே'
''வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாவில ஏகப்பட்ட ஏக்ஸிடென்ட் நடக்குதாம். திருட்டு, அது இதுன்னு நிறைய நடக்குதாம். இப்படியே போனா என்னதான் பண்றதுன்னு தெரியாத போலீஸ்காரங்க, ஸ்டேஷனுக்குள்ல பூஜை நடத்தியிருக்காங்க,''''ஏதோ மர்ம பூஜை நடத்தினாங்கன்னு சிலரு கிளப்பிவிட 'அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, கணபதி ஹோமம் மட்டும்தான் நடத்தினோம்ன்னு, ஸ்டேஷன்ல இருக்கறவங்க சொல்லியிருக்காங்க. இருந்தாலும், அந்த ஸ்டேஷன் ஆபீசருக்கு, பெரிய ஆபீசர் 'மெமோ' கொடுத்துட்டாராம்,'' என்றாள் மித்ரா.''திருஷ்டி கழியணும்ன்னு பூஜை நடத்தினா, இப்படி ஏழரைய கூட்டி விட்டுட்டாங்களேன்னு, அங்க இருக்கறவங்க புலம்பறாங்களாம்,'' என சிரித்தாள் சித்ரா.பதிலுக்கு சிரித்த மித்ரா, ''ஏழரைன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம், நிலப்பிரச்னை சம்மந்தமா ஒரு தொழிலாளியை, விசாரணை பண்றதுக்காக ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த ஒருத்தரை கட்டி வைச்சு நையப்புடைச்சுட்டாங்க. சி.எஸ்.ஆர்., கூட போடாம, அந்த தொழிலாளியை 'வெளுத்ததால', விரல் முறிஞ்சுப்போச்சாம். அவரு மனித உரிமை வரைக்கும் விஷயத்தை கொண்டு போயிட்டாராம். ஆனா, அந்த மாதிரி நாங்க எதுவும் செய்யலைன்னு, போலீஸ்காரங்க 'ஜகா' வாங்கறாங்களாம்,'' என்றாள்.''நீ சொல்றது பல்லடம் விவகாரம் தானே மித்து. இதுல ஆளுங்கட்சிக்காரங்க கொடுத்த 'பிரஷர்'ல தான், அப்படி செஞ்சோம்னு வேற சொல்றாங்க,'' என்ற சித்ரா, ''அதே ஊர்ல பரபரப்பை ஏற்படுத்தின 'அக்னி பிரதர்ஸ்' கொலை சம்பவத்துல, இதுவரைக்கும், எட்டு பேரை 'அரெஸ்ட்' பண்ணியிருக்காங்க. ஆனாலும், பட்டியல் நீண்டுக்கிட்டே போகுதாம். 'அரெஸ்ட்' ஆனவங்க மேல, ஏகப்பட்ட 'கேஸ்' இருக்காம். இந்த மேட்டரில், ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க தான், பின்புலமா இருக்காங்கன்னு ஒரு தகவல் உலா வருதுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா. கஞ்சா 'டோர் டெலிவரி'
''ஊத்துக்குளி ரோட்ல, 'சத்யம்' பெயர் தாங்கிய ஒரு காலனி இருக்கு. அங்க, 3 பசங்க கஞ்சா விற்பனையில படுபிஸியாம். வீடுவீடா போய் 'டோர் டெலிவரி' கூட பண்றாங்களாம்'' என பேச்சை மாற்றினாள்.''நிறைய இடத்துல இந்த மாதிரி நடக்குதுங்க்கா. என்னதான் பண்றது'' என, அங்கலாய்த்த மித்ரா, ''ஒரு கிராமத்துல, ரெண்டு பேரு வி.ஏ.ஓ.,க்கு உதவியாளரா இருக்காங்களாம்,'' என பேச்சை மாற்றினாள்.''அடடா அப்படியா?'' என்றாள் மித்ரா.''ஆமாங்க்கா. அவிநாசி தாலுகா ஆபீசில இருந்த ஒரு ஆபீசரை, திருப்பூர் சவுத்துக்கு மாத்திட்டாங்க. அவரு அங்க இருந்து வர்றதுக்கு முன்னாடி, வி.ஏ.ஓ., உதவியாளருங்களுக்கு 'டிரான்ஸ்பர்' போட்டிருக்காரு. இதுல, செம்பியநல்லுாரில் இருந்தவரை, நம்பியாம்பாளையம் கிராமத்துக்கு மாத்தினாராம். ஆனா, அவரு அங்க போக மாட்டேன்னு சொல்லிட்டு, பழைய இடத்திலயே இருக்காராம்,''''அதே சமயம், செம்பியநல்லுாருக்கு மாத்தப்பட்டவரும் அங்க வந்துட்டார். இப்ப ரெண்டு பேரும் அங்க இருக்கிறதால, என்ன பண்றதுன்னு தெரியாம ஆபீசர்களுக்கு ஒரே கன்பியூஷன். இதுல 'பொலிடிகல் பிரஷர்' வேற இருக்கும் போல...'' என்றாள் சித்ரா. 'டுபாக்கூர்ஸ்' வசூல் வேட்டை
''கருவலுார் பக்கத்துல இருக்கற 'டாஸ்மாக்' பாருக்கு, நிருபர்கள்ன்னு சொல்லிட்டு சிலரு போயிருக்காங்க. கடையையும், வண்டியில இருந்து கடைக்கு சரக்கு எடுத்துட்டு வர்றதை எல்லாம் வீடியோவா எடுத்துட்டு, சூப்பர்வைசர்கிட்ட, 'நீங்க இல்லீகலா சரக்கு விக்கிறீங்கன்னு' சொல்லி, பணம் கேட்டிருக்காங்க,''''பணம் கொடுக்கலைன்னா, வீடியோவை எங்க சேனல்ல போட்டுடுவோம்னும் சொல்லியிருக்காங்க. அதே மாதிரி, ஒரு யூடியூப் சேனல்ல அந்த வீடியோவை போட்டு, டாஸ்மாக் ஆபீசர்ல இருந்து கடை சூப்பர்வைசர் வரைக்கும் காசு வாங்கியிருக்காங்களாம். இந்த மாதிரி, ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும், மாசாமாசம், 130 பேர் நிருபர்கள்ன்னு சொல்லிக்கிட்டு போறாங்களாம். கடைக்கு, 100 ரூபா மாதிரி வசூல் பண்றாங்களாம். இந்த மாதிரி ஆட்களை கட்டுப்படுத்த வேண்டிய துறையை கவனிக்கிற ஆபீசர், சைலன்டா இருக்கறாராம்,'' என்றாள் மித்ரா.''சம்பந்தப்பட்ட துறையை கவனிக்கிற மினிஸ்டர் இருக்கற ஏரியாவிலயே இப்படி நடக்குதுன்னா என்ன தான் பண்றது'' என, 'உச்' கொட்டிய சித்ரா, ''ஓகே., மித்து நான் கிளம்பறேன்,'' என புறப்பட்டாள்.
சின்னசாமி பணம் சுருட்டுவதில் பெரிசாமி aaayittar.