உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோயில் அர்ச்சகர்களுக்கு காணிக்கை: அரசு உத்தரவு வாபஸ்

கோயில் அர்ச்சகர்களுக்கு காணிக்கை: அரசு உத்தரவு வாபஸ்

மதுரை : கோயிலில் பக்தர்கள் அர்ச்சகர் தட்டில் விருப்பத்துடன் வைக்கும் காணிக்கையை உண்டியலில் செலுத்த அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

ஹிந்து அமைப்புகள் கண்டனம்

அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ள அறநிலையத்துறைக்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறியிருப்பதாவது: மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் அர்ச்சகர் தட்டில் விருப்பத்துடன் வைக்கும் காணிக்கையை உண்டியலில் செலுத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது கண்டனத்திற்குரியது.அர்ச்சகர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை.பக்தர்கள் விரும்பி செலுத்தும் காணிக்கையை உண்டியலில் போட உத்தரவிடுவதால் அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அர்ச்சகர்களை திருடர்கள் போல நினைத்து அவமதிக்கின்றனர்.பிராமணர் சமூகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் திராவிட மாடல் அரசு இதுபோன்று காயப்படுத்துகிறது. இது அச்சமூகத்தை கோயிலை விட்டு வெளியேற்றுவதற்கான சதித் திட்டம். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்த கோயில் செயல் அலுவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதிகார செயல்

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் கூறியிருப்பதாவது: அரசின் இந்த உத்தரவு சர்வாதிகார செயல். அர்ச்சகர்களின் வயிற்றில் அடிக்கும் இதனை கண்டிக்கிறேன். கடவுளை வர்த்தக பொருளாக்கி வருமானம் பெருக்கும் திராவிட மாடல் அரசை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இதே நிலை நீடித்தால் உண்டியலில் காணிக்கை போடும் பக்தர்கள் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும். அர்ச்சகர்களுக்கு வழங்கும் சம்பளம் குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்குமா. தட்டில் போடும் காணிக்கையை தட்டிப்பறிக்கும் அரசாக இது உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Kandhavel
பிப் 16, 2025 12:13

நம்முடைய அனைவரின் கோபத்தை 2026 ஓட்டு போடும் போது காண்பிக்க வேண்டும், மாமன் ,மச்சான் பங்காளி, பிற மத நண்பர்கள் என யாரையும் நம்பாமல் நம்முடைய மதத்தை காப்பாற்றும் கட்சிக்கு மட்டும் நம்முடைய ஒட்டு . பிஜேபி .


Tetra
பிப் 11, 2025 13:10

ப்ராம்மணர்கள் இருக்கும் வரை கோவில்கள் இருக்கும். கோவில்கள் இருக்கும் வரை ஸனாதனம் இருக்கும். ஸனாதனத்தை அழிக்கத் துடிக்கும் ஸக்திகள் அதனால் அர்ச்சகர்கள் வயிற்றில் அடிக்கிறது. உங்களுக்கு தெரியுமா? அர்ச்சகர் தட்டில் விழுவது முழுவதும் அவர்களுக்கு போவதில்லை. கோவில்களிலிருக்கும் திராவிடர்கள் எடுத்துக்கொண்டது போக மிச்சமே அர்ச்சகர்களுக்கு. உண்மையில் ஹிந்துக்கள் முகமதிய வரியான ஜிஸியா கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். என் கடவுளை என் முன்னோர்கள் வழிபட்ட வழியில் ப்ரார்த்திபதற்கு நான் ஏன் காசுகொடுக்க வேண்டும்.


Bhaskaran
பிப் 11, 2025 05:00

கொஞ்சம் விட்டால் பிச்சைக்காரன் இடமும் பணம்பிடுங்கும் அரசு


Venkatesan Srinivasan
பிப் 10, 2025 22:59

இந்துமத விரோத ஆட்சியாளர்கள். மதச்சார்பின்மை என்பதை - கண்டிப்பாக இந்து மதச்சார்பின்மை என்று பொருள் கொள்ளலாம். உடனிருந்து ஹிம்சிக்கும் துரோகிகள்.


Ramesh Sargam
பிப் 10, 2025 22:25

உண்டியலில் கொள்ளையடித்தது போதாது என்று, அர்ச்சகர்களுக்கு கிடைக்கும் சொல்ப காணிக்கையும் வேண்டுமா உங்களுக்கு. அடுத்து நீங்க கோவில் எதிரில் அமர்ந்து யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்களிடம், அவர்களுக்கு மக்கள் கொடுக்கும் காணிக்கையையும் உண்டியலில் போடவேண்டும் என்று சொன்னாலும் சொல்வீர்கள். அப்படி அவர்கள் போடாவிட்டால், அவர்களை நீங்கள் திமுக குண்டர் சட்டத்தில் கைது செய்தாலும் செய்வீர்கள். அந்த அளவுக்கு கேடுகெட்டவர்கள் நீங்கள்.


செல்வா
பிப் 10, 2025 18:39

கோவிலில் சுவாமியை தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கும் முறையை நீக்க வேண்டும். பணத்தால் பாகுபாடு பார்க்கப்படும் மக்களுக்கு சமூகநீதி் கிடைக்குமா? அதென்ன பணம் கொடுத்தால் ஒரு தரிசனம், இலவசம் என்றால் இளக்காரமா?. பணத்தால் அறநிலையத்துறை கடைப்பிடிக்கும் நவீன தீண்டாமையா? இது உடனே கலையப்பட வேண்டும். இந்து அமைப்புகள் ஒன்று திரண்டு இந்த நவீன தீண்டாமையை களைய மக்களை திரட்டி போராட வேண்டும். பொதுமக்கள் உண்டியலில் பணம் போடுவதை தவிர்க்க வேண்டும். கோவில் உண்டியலில் பணம்போட்டு கடவுளை பிச்சைக்காரராக மாற்றாதீர்கள்


ஆரூர் ரங்
பிப் 10, 2025 16:40

அடுத்து தசம பாகம், ஜக்காத்தை அரசு வைத்திருக்கும் உண்டியலில் மட்டுமே செலுத்த வேண்டும் என உத்தரவிடுவரா? இளிச்சவாயன் ஹிந்துமட்டும் தானா ?


தமிழ்வேள்
பிப் 10, 2025 15:14

சர்ச் மற்றும் மசூதிகளிலிருந்து அரசுக்கு சிங்கிள் பைசா கூட வரும்படி இல்லை ..ஆனால் கோவில் வசூலிலிருந்து இமாம் முல்லா , பாதிரிக்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் வெட்டி கப்பம் ..ஆனால் கோவில் அர்ச்சகர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் மட்டும் சம்பளம் ..அதாவது அர்ச்சகர்களை வெறுப்பேற்றி வேலையிலிருந்து விரட்டிவிட்டால் , கோவில்களையும் சர்ச் மசூதி ஆக்கி கும்மியடிக்கும் திட்டம் திமுக விடம் உள்ளது போல தெரிகிறது ...அயோக்கியத்தனம் எல்லைமீறிப்போவது நல்லதற்கல்ல ...


Tetra
பிப் 11, 2025 13:12

2000 எங்கே கொடுக்கிறார்கள்? தெரிந்தால் சொல்லவும்


ஆரூர் ரங்
பிப் 10, 2025 14:17

அரசு அமல்படுத்தி இருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டத்தில் அர்ச்சகர்களுக்கு மட்டும் விதிவிலக்கா? ஜாதிதானே காரணம்? தட்டுக் காசயும் பிடுங்கி விட்டால் பட்டினி கிடக்கட்டும் எனும் நல்லெண்ணம்.


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 10, 2025 13:52

அந்த பயம் இருக்கட்டும். சும்மா 21 ஆம் பக்கம், இரும்பு கரம் எல்லாம் வெட்டி உதார்


guna
பிப் 10, 2025 14:52

ஒரிஜினல் பச்சொந்தியயோ இந்த GST ஆபீஸர்


முக்கிய வீடியோ