உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ஹிந்தி படித்திருந்தால்...!

டில்லி உஷ்ஷ்ஷ்: ஹிந்தி படித்திருந்தால்...!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியின் பா.ஜ., முதல்வராக ரேகா குப்தா பதவியேற்ற பின், தன் சக அமைச்சர்களுடன், டில்லியில் உள்ள யமுனை நதிக்கரைக்கு சென்றார். காசியில் கங்கை நதிக்கு ஆரத்தி எடுப்பது போல இங்கு, யமுனைக்கும் ஆரத்தி நடத்தினார் ரேகா.இந்த நிகழ்ச்சிக்கு, தமிழக எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., மகளிர் அணி தலைவருமான, வானதியை அழைத்திருந்தார் ரேகா. அத்துடன், பா.ஜ., தலைவர் நட்டா, 'நீங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்' என, வானதியிடம் சொன்னாராம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3hfkqb1z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரேகாவுடன், ஆங்கிலத்திலேயே பேசினார் வானதி. சக அமைச்சர்கள், பா.ஜ., தொண்டர்கள் அனைவரும், ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தனர்; வானதிக்கு ஹிந்தி ஓரளவு தெரிந்தாலும் சரளமாக பேச முடியவில்லை. 'நீங்கள் விரைவில் ஹிந்தி நன்றாக கற்றுக் கொள்ளுங்கள்; அப்போதுதான், வடமாநில அரசியலை நன்றாக புரிந்து கொள்வீர்கள்' என்றாராம், டில்லி முதல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
பிப் 23, 2025 15:39

தனி ஸ்கூலில், ஹிந்தி பிரச்சார சபையில் சேர்ந்து படிச்டிருக்கலாமே தாயி. உங்களை விட பெரியவரான நிர்மலா ஜீ விழுப்புரத்தில் எங்க அம்மாகிட்டே கொஞ்ச நாள் இந்தி படிச்சாங்க தாயி. நீங்க படிக்காம மத்தவங்களை இந்தி படிங்கன்னு சொல்றது நியாயமா தாயி?


கிஜன்
பிப் 23, 2025 12:40

டெல்லி சலோ .... நிம்மதியா ஜிலேபி சாப்பிடலாம் ...


அப்புசாமி
பிப் 23, 2025 08:49

இந்தி தெரியாத நீ அரசியலுக்கு ஒத்துவரமாட்டே.


Padmasridharan
பிப் 23, 2025 08:32

தென் இந்திய மொழிகளை மொதல்ல கத்துக்கட்டும். அதுக்கு முன்னாடி "ழ" எழுத்த எல்லாரும் சரியா உச்சரிக்கட்டும். Profession காக கத்துக்கறது வேற studies காக கத்துக்கறது வேற


முருகன்
பிப் 23, 2025 05:12

வடமாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி ஆக வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை