உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காஞ்சி ராணி என் தாய்; நான் தமிழகத்தின் மகன்; தர்மேந்திர பிரதான் மீண்டும் காரசாரம்

காஞ்சி ராணி என் தாய்; நான் தமிழகத்தின் மகன்; தர்மேந்திர பிரதான் மீண்டும் காரசாரம்

தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்குவது தொடர்பாக நேற்று முன்தினம் லோக்சபாவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க., - எம்.பி.,க்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஜ்யசபாவில் நேற்று, தர்மேந்திர பிரதான் பேசியதாவது:ஒடிசாவில் பகவான் புரி ஜெகன்நாதர் எல்லாவற்றுக்கும் மேலானவர். ஒடியா மக்களாகிய எங்கள் அனைவருக்குமே புரியின் மன்னர் என்பவர், ஒரு வாழும் கடவுள்.

சகோதரிகள் தான்

அப்படிப்பட்ட எங்களது மன்னர், யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா? தமிழகத்தின் காஞ்சிபுரத்து ராணியைத் தான். எனவே, என் தாயார் தமிழகத்திலிருந்து வந்தவர். அந்த வகையில் நானும் தமிழகத்தின் மகன்.கடந்த இரண்டு நாட்களாக, ஒரு பிரச்னை போய்க் கொண்டிருக்கிறது. ராஜ்யபாவில் உள்ள கனிமொழியும் சரி, லோக்பாவில் உள்ள இன்னொரு கனிமொழியும் சரி; இருவருமே என் சகோதரிகள் தான். நான் ஒரு ஒடிசாக்காரன். அங்குள்ள கடவுள் ஜெகன்நாதரின் பக்தன். எங்களது கலாசாரத்தின்படி, அம்மா, சகோதரி ஆகியோர், அனைவரையும் விட மிகவும் உயர்ந்தவர்கள்.என் வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், மீண்டும் மன்னிப்புக் கேட்கிறேன். ஒருமுறை அல்ல; 100 முறைகூட மன்னிப்பு கேட்கிறேன். இதில், எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை.அதேசமயம், பி.எம்.ஸ்ரீ திட்ட விவகாரத்தில், உண்மையை நேருக்கு நேராக சந்தித்தே ஆக வேண்டும். 13 முறை, தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின், கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா ஆகியோருடன், நானும், என் அமைச்சகமும் தகவல் தொடர்பு கொண்டுள்ளோம்.தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா எழுதிய கடிதத்தில், 'பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கு, நாங்கள் மிகவும் விருப்பமாக உள்ளோம். பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை, தமிழகத்தில் துவங்குவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ஆர்வமாக உள்ளோம்.

வாய்ப்பை கெடுக்காதீர்

'இது தொடர்பாக குழு அமைத்து, அது அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன், கையெழுத்திட தயாராக உள்ளோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது; இத்தனையும் நடந்த பின், இன்று மறுக்கின்றனர். அதை எப்படி செய்கின்றனர் என புரியவில்லை. அதேநேரம், பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று, யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். தமிழக சட்டசபையில், ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை யாரும் மறந்துவிடவில்லை. அப்படிப்பட்டவர்கள், எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். தமிழுக்கு ஆதரவானவர்கள் நாங்கள். அதற்கு யாரும் எங்களுக்கு சான்றிதழ் அளிக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் தமிழக எம்.பி.,க்கள் என்னை திட்டுங்கள். தனிப்பட்ட முறையில் இழிவான வார்த்தைகளை வீசுங்கள்; கவலையில்லை. வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் இலக்கு. தமிழகம் இந்தியாவின் அங்கம். தமிழகத்தை முன்னேற்றுதே எங்களுக்கான பொறுப்பு.என்னை முட்டாள் என நீங்கள் இப்போது கூறலாம். ஆனால், காலம் காலமாக தமிழக மக்களை முட்டாளாக்க, இனியும் உங்களால் முடியாது. என்னை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை. ஆனால், தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பை கெடுக்காதீர்கள்.இவ்வாறு பேசினார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

venugopal s
மார் 12, 2025 22:52

அந்தக் காஞ்சி ராணி யார் என்று தெரியுமா?


முருகன்
மார் 12, 2025 22:07

அப்படி என்றால் கல்வி நிதியை விடுவிக்க வேண்டியது தானே


BalaG
மார் 12, 2025 23:46

ஏற்கனவே கொடுத்த நிதிக்கு உண்மையான சரியான நேர்மையான கணக்கை கொடுக்க முடியுமா? அரசு பள்ளிகளில் ஏன் இன்னும் கழிப்பறைகள் கட்டமுடிக்கபடவில்லை? இன்னும் பல கேள்விகள் இப்படி. தற்குறிகளும், தத்திகளும், திருட்டு பசங்களும் மாதிரி பணத்தை கையாள விடமுடியாது..


Tetra
மார் 16, 2025 20:05

எதுக்கு. ஏப்பம் விடுவதற்கா?


Bhakt
மார் 12, 2025 20:34

திருட்டு ரயில் ஏறி வந்தவர் எங்கள் நைனாவின் நைனா.


தமிழன்
மார் 12, 2025 19:44

பர்த் சர்டிபிகேட்டில் குழப்பம்


Bhakt
மார் 12, 2025 20:35

தமிழன் இல்லையா? OMG.


சண்முகம்
மார் 12, 2025 19:28

இந்த ஒரிசாகாரனுங்க தான் அந்த காலத்தில் இலங்கையில் குடியேறிய சிங்களவர்கள். இவருடைய தமிழ்தொடர்பு தெரிகிறதா,? இவர் ஒரு கோடாலிக்காம்பு.


theruvasagan
மார் 12, 2025 22:33

ஒரியாகாரன் கோடாலிகாம்பா சம்முகம். அப்ப நவீன் பட்நாயக் என்கிற ஒரியா தலைவரை வெத்திலை பாக்கு வச்சு 22ம் தேதி சென்னையில விருந்துககு கூப்புட்டது எதுக்குன்னு உன் தலைவன் கிட்ட கேளு.


Tetra
மார் 16, 2025 20:07

வரலாறு தெரியாமல் பேச கூடாது. சிங்களத்தில் குடியேறினர் உங்கள் மம்தா அக்கா நாட்டவர்.


Sridhar
மார் 12, 2025 15:59

இவங்களுக்கெல்லாம் இவ்வளவு மரியாதை கொடுத்து ஒரு அமைச்சர் பேச வேண்டுமா? இன்னும் கொஞ்ச நாள்ல டாஸ்மாக் கேசுல எல்லாம் உள்ள போகப்போகுது. ஏறி மிதிக்கறத வுட்டுட்டு, சகோதரி தாய்னு சொல்லி அந்த உன்னத உறவுகளை கொச்சைப்படுத்தணுமா?


தமிழன்
மார் 12, 2025 13:25

காஞ்சி ராணி யாருப்பா அது??


vivek
மார் 12, 2025 14:35

அதுதான் உன் கொள்ளு பாட்டி....


Bhakt
மார் 12, 2025 20:39

காஞ்சி ராணி திராவிஷர்கள் மாதிரி டுபாக்கூர் ராணி கிடையாது Mr. Tumilan


M Ramachandran
மார் 12, 2025 13:12

ஸ்டாலின் அண்ட் கனிமொழி கம்பெனி டிராமா பற்றி தமிழகத்திலேயே புண்ணு புரையேரி சீழ் பிடிச்சி நாறி போயிடுச்சி.


RAMKUMAR
மார் 12, 2025 12:47

என்னை _________என நீங்கள் இப்போது கூறலாம். ஆனால், காலம் காலமாக தமிழக மக்களை முட்டாளாக்க, இனியும் உங்களால் முடியாது. என்னை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை. ஆனால், தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பை கெடுக்காதீர்கள். நீங்கான் மிகவும் உயர்ந்தவர் சார்


Krishnamurthy Venkatesan
மார் 12, 2025 11:55

ஷிவதாஸ் மீனாவின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை பற்றியோ, தம் கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி பாடம் நடத்துவது பற்றியோ, தமிழே இல்லாமல் உருது சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளை பற்றியோ இந்த 200 உ.பீஸ், கட்டிங் அண்ட் பிரியாணி தொண்டர்கள் ஏன் கேள்வி கேட்க மாட்டேன் என்கிறார்கள்?


Bhakt
மார் 12, 2025 20:40

அவங்க மரபணு அந்த மாதிரி


சமீபத்திய செய்தி