உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மொபைல் சர்வீஸ் மது விற்பனை தாராளம்; 24 மணி நேரமும் கிடைப்பதால் அபாயம்

மொபைல் சர்வீஸ் மது விற்பனை தாராளம்; 24 மணி நேரமும் கிடைப்பதால் அபாயம்

சென்னை: 'டாஸ்மாக்' மூலம் தமிழக அரசே மது வகைகளை விற்பனை செய்கிறது. பகல் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மது விற்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6iy381kb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன்பின், மதுக்கூடங்களில் நள்ளிரவு 12:00 மணி வரை கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்,ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின்பாலம் உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளில், அறிமுகமானவர்கள் போனில் தொடர்பு கொண்டால், மது வகைகள் வீடு தேடி சென்று கொடுக்கப்படுகிறது. இதற்கு பாட்டிலுக்கு 100 ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.இதுபோன்ற மொபைல் போன் சர்வீஸ் விற்பனை, அம்பத்துார், செங்குன்றம், சோழவரம், மாதவரம் பால்பண்ணை, ஆவடி டேங்க் பேக்டரி மற்றும் புழல் காவல் நிலைய எல்லை சுற்றுவட்டாரங்களிலும் அதிகரித்து வருகிறது.வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், மது வகைகள் மட்டுமின்றி குட்கா, மாவா, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களும் சர்வசாதாரணமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி போலீசில் சிக்கினால், 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும் என்பதால், மொபைல் சர்வீஸ் சரக்கு விற்பனையை நாடுகின்றனர். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், காசுக்காக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், இரவில் சாலையில் பயணிக்க முடியாமல், வடசென்னை வாசிகள் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.

மாமூல் மழையில் போலீசார்

போதை பொருள் விற்பனையை உள்ளூர் போலீசாரும், மது விலக்கு போலீசாரும் கண்டுகொள்வதில்லை. தங்களிடம் சிக்கும் வியாபாரிகளிடம், வேண்டியதை கறந்து கொண்டு அனுப்பி விடுகின்றனர். மாமூல் போலீசாரால் தான், கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனை கூட தாராளமாக நடக்கிறது. இதனால் அதிகரிக்கும் வியாபார போட்டியால், வியாபாரிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அரங்கேறுகின்றன என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Baranjothi g
மார் 13, 2025 05:54

சூப்பர்


venugopal s
மார் 10, 2025 17:24

இது என்ன பிரமாதம்? மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஃபோன் கால் மூலம் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கள்ளத்தனமாக கடத்தப்பட்ட சரக்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இப்போதும் நடக்கிறது.


baala
மார் 14, 2025 12:49

இருக்காது. முதன்மையான மாநிலம் அது. கட்டுப்பாட்டில் முதன்மை


R K Raman
மார் 10, 2025 12:31

இது என்ன வட மாநிலத்தவர் மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளவர்கள் நம்மவர் மிகவும் நல்லவர் என்று.... நீங்களுமா


RAMESH
மார் 10, 2025 10:22

இதை தமிழக அரசிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்த வேண்டும். மொபைல் மது சப்ளை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்ட வேண்டும். திருமாலுக்கு சப்ளை செய்ய இரண்டு வேன்களை கொடுத்தால் நல்லது.


சண்முகம்
மார் 10, 2025 10:16

டாஸ்மாக் கடைகளையும், பாரையும் மூடிவிட்டு, வீட்டு டெலிவரி மட்டும் தான் என்ற முறை கொண்டு வந்தால் தெருவில் குற்றங்கள் குறைய வாய்ப்பு அதிகம். வீட்டில் செருப்படி விழும் என்பதால் குடியும் குறையும்.


Karthik
மார் 10, 2025 10:05

திருடர்கள் முன்னேற்ற கட்சியினரின் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 10, 2025 10:00

எப்ப பாரு இந்த பாஜக காரனுக்கு வேற வேலையே இல்லை. ஐநூறு கடை ஓப்பன் செஞ்சூட்டானுக ஆயிரம் பார் ஓப்பன் பண்ணிட்டாங்க சொல்றதே வேலையா போச்சு. மொபைல் சர்வீஸ் ஓப்பன் செஞ்சு புதுசா ஒரு மொபைல் ஆப் பண்ணி காவல் துறை கட்டுப்பாட்டில் கொடுத்துட்டு சிவனேன்னு எல்லா கடையையும் மூடிட்டா இந்த ஈடீ தொல்லை இருக்காது ஜிஎஸ்டி தொல்லையில்லை இன்கம்டாக்ஸ் தொல்லை இல்லை. மின்சார கண்ணன் கனவு நனவாகி ஒன்றியத்தின் ஒரு பாகமான தமிழக அரசுக்கு பாதகமில்லை. எவ்வளவு இல்லை பாருங்க.


naranam
மார் 10, 2025 08:46

திராவிடன்ஸ் ஆட்சியில இதெல்லாம் சாதாரணமப்பா!


orange தமிழன்
மார் 10, 2025 08:41

இதை எல்லாம் நிறுத்த ஒரே வழி தீயமுகவின் ஆட்சி ஒழிய வேண்டும்...


சுந்தர்
மார் 10, 2025 08:02

ஊரைக் கெடுக்கும் அரசியல் கும்பல்கள் கையில் தமிழ்நாடு.


சமீபத்திய செய்தி