மேலும் செய்திகள்
மின் தடைக்கு யார் காரணம்? உதயநிதி - நிர்மல்குமார் வாக்குவாதம்
6 hour(s) ago | 1
அ.தி.மு.க.,வில் மீண்டும் சசிகலா, தினகரன்?
22-Jun-2026 | 24
சமீபத்தில் ஐந்து மாவட்டங்களில் பிரசாரம் செய்து விட்டு, கோவை திரும்பிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, வழியில், பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில், ஐந்து நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டி காரை ரோட்டோரம் நிறுத்தினார்.அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர்கள் அண்ணாமலையை அடையாளம் கண்டு, காரை சூழ்ந்து கொண்டனர். வேறு வழியின்றி ஐந்து நிமிடம் துாக்கத்தையும் பொருட்படுத்தாமல், ஆட்டோ டிரைவர்களுடன் அன்புடன் பேசி, அனுப்பி வைத்த கையோடு, மீண்டும் பிரசாரத்துக்கு புறப்பட்டார்.'கட்சிகளில், தேர்தல் பிரசாரத்துக்கு, சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளனர். ஆனால், பா.ஜ.,வில் மாநிலத் தலைவர் அண்ணா மலை தானே வேட்பாளராகவும், வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். ஓய்வில்லா உழைப்பாளியாக களப்பணி ஆற்றி வருகிறார்.'சமீபத்தில் கூட, தனது தாயைப் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆவதாக அவரே கூறியுள்ளார். ஓய்வின்றி கட்சிக்காக உழைக்கிறாரே' என்று, நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர், பா.ஜ.,வினர்.
6 hour(s) ago | 1
22-Jun-2026 | 24