உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாரிசு சான்று வழங்க ரூ.3,500 லஞ்சம்: குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.,வை அமுக்கிய போலீசார்

வாரிசு சான்று வழங்க ரூ.3,500 லஞ்சம்: குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.,வை அமுக்கிய போலீசார்

கோவை: லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.,வை, பின்னால் துரத்தி வந்த போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். தற்போது, குளத்தில் விழுந்த லஞ்ச பணத்தை தேடும் பணியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை, தொம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், வாரிசு சான்று வாங்க, விண்ணப்பித்து இருந்தார். சான்று வழங்குவதற்கு, மத்வராயபுரம் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வரும் வெற்றிவேல், என்பவர் 3,500 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=skfi0fy2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லஞ்சம் தர முடியாது என, கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதனால், சான்று வழங்காமல், வி.ஏ.ஓ., வெற்றிவேல் காலம் தாழ்த்தி வந்தார்.இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில், கிருஷ்ணசாமி புகார் அளித்தார். நேற்று இரவு, பேரூரில் வைத்து வெற்றிவேலிடம் பணத்தை கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடிக்க முயன்றபோது, வெற்றிவேல், தனது இருசக்கர வாகனத்தில் தப்பினார்.சிறிது தூரம் சென்றபோது, பேரூர் பெரியகுளத்திற்குள், பணத்துடன் வி.ஏ.ஓ., வெற்றிவேல் குதித்து விட்டார். பின்னால், துரத்தி வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், குளத்தில் குதித்து, வெற்றிவேலை பிடித்தனர்.ஆனால், ரசாயனம் தடவிய பணம், குளத்தில் விழுந்தது. இதையடுத்து, வெற்றிவேலை, பேரூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். மற்றொருபுறம், குளத்தில் விழுந்த ரசாயனம் தடவிய பணத்தை தேடி எடுத்தனர். பின், வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். தற்போது, குளத்தில் விழுந்த லஞ்ச பணத்தை தேடும் பணியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ராம்கி
மார் 16, 2025 21:38

கிராம நிர்வாக அதிகாரியை கைது செய்யும் ஊழல் லஞ்சஒழிப்பு துறை அரசியல் தலைவர்களின் ஊழல்கள் மீது விசாரணை செய்யாமல் இருப்பது ஏன்? முதலைகளை சுதந்திரமாக விட்டு விட்டு சிறுதவளைகளை பிடித்து டிஸ்மிஸ் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள். அரசியல் தலைவர்களின் ஊழல் வழக்குகளுக்கு வாய்தாக்கள் வழங்கி நீர்த்துப் போக வகை செய்யும் கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள். நீதித்துறையும் மீளாத் தூக்கத்தில்..... மக்கள் நொந்து போய் உள்ளார்கள். மாற்றம் நிகழுமா?


R.Gopal
மார் 16, 2025 13:59

இது மத்திய மாநில கோடிகளை சுருட்டும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தணும்.சிங் அறிக்கை பணபட்டுவாடா ரோடு போட 7500000 கோடி அபேஸ்...40கோடி திரகரன்திரகரன்லஞ்சபணம் ..சசிகலா பணம் ...மற்றும் அண்ணாமலை பிரிக்ஸ 800 கோடி வரிஏய்ப்பு ..விஜய பாஸ்கர் வரி ஏய்ப்பு குட்கா ..பணம்.செந்தில்பாலாஜி சாராய பணம் .எடப்பாடி ஏலப்பணம் இப்படி ஒரே உதாரணம் ஏட்டில்தான் இருக்கு நடவடிக்கை எப்போ? எவனும்கேட்ப்பதில்லை .சும்மா திரள்நிதி காரணம்.கருப்புவெளுப்புமாக வாங்குறவனும். கள்ள லாட்டரி நடத்தும் கோடிஸவரனும் பேச்சோட சரி ..என்ன இளிச்சவாயன்கள் ..ஓட்டு போடுவான் அதானே? இதில் யோக்கியன்மாதிரி நிறைய கிளம்பி வருவானுக


Ramesh Kumar
மார் 16, 2025 07:16

டDismiss the VAO immediately


Karthik
மார் 15, 2025 23:25

இங்கிருப்பது நவீன திருடர் மாடல் அரசு - அதிகாரி என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை உணரவேண்டும் முதலில். இல்லையேல் இப்படித்தான் தடயம் அழிந்து போகும். கேஸு நிக்குமா..??


நிக்கோல்தாம்சன்
மார் 15, 2025 21:05

அவனை அங்கிருக்கும் சாக்கடையில் முக்கி வைத்திருக்க வேண்டும் , வெற்றிவேலின் பணத்தில் சாப்பிடும் அவனது வீட்டினர் வெட்கி தலை குனியும் நேரமிது


Ramesh Sargam
மார் 15, 2025 20:11

பிறகு என்ன, வழக்கு பதிவு, ஜாமீன், போதிய சாட்சியம் இருக்காது. நீதிமன்றம் விடுவிக்கும், இதுதான் இனி நடக்கும். லஞ்சம் வாங்கியவன் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவான். மீண்டும் லஞ்சம் வாங்குவான். இப்படியே கதை தொடரும் சிந்துபாத் தொடர்கதைப்போல.


Thunba nidhi
மார் 15, 2025 15:09

3500 வாங்கினவரை பிடிச்சிட்டேள், 35000 கோடி சுருட்டினவாளை எப்போ பிடிக்கப் போரேள் ஆபீசர்ஸ்ஸ்ஸ்........


S.Balakrishnan
மார் 15, 2025 14:25

VAO புத்திசாலி. சுலபமாக தப்பிக்க சமயோசிதமாக நீரில் பணத்துடன் குதித்து இருக்கிறார். பாராட்டுக்கள். சரியான வக்கீலை பிடித்தால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை மடக்கி விட முடியும்.


RAAJ68
மார் 15, 2025 12:55

ஆஹா ஆஹா என்ன ஒரு சாதனை. அவனவன் 40,000 கோடி 2 லட்சம் கோடி என சுருட்டுகிறான். அவர்கள் மீது கை வைக்க தைரியம் இல்லை. பாவம் அப்பாவி


Ramesh Sargam
மார் 15, 2025 12:29

பிறகு என்ன, வழக்கு பதிவு, ஜாமீன், போதிய சாட்சியம் இருக்காது. நீதிமன்றம் விடுவிக்கும், இதுதான் இனி நடக்கும். லஞ்சம் வாங்கியவன் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவான். மீண்டும் லஞ்சம் வாங்குவான். இப்படியே கதை தொடரும் சிந்துபாத் தொடர்கதைப்போல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை