உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லாரியை மறித்து பணம் பறித்த ஆர்.டி.ஓ.,வின் டிரைவர், புரோக்கர் கைது

லாரியை மறித்து பணம் பறித்த ஆர்.டி.ஓ.,வின் டிரைவர், புரோக்கர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: ஜல்லி ஏற்றி வந்த லாரியை மடக்கி, வட்டார போக்குவரத்து அலுவலர் என கூறி, மிரட்டி 16,500 ரூபாயை பறித்த, ஆர்.டி.ஓ.,வின் டிரைவர், புரோக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பப்பட்டு பகுதியை சேர்ந்த பாரதி லாரன்ஸ், 32. இவர் புதுக்கோட்டையில் இருந்து, நன்னிலத்திற்கு லாரியில், ஜல்லி ஏற்றிக் சென்று கொண்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரில் வந்த இருவர் லாரியை மறித்தனர். மேலும், லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ்சிடம், பர்மிட் எங்கே என்று கேட்டு, காரில் ஆர்.டி.ஓ., இருக்கிறார் என கூறினார்.மேலும், அடையாள அட்டையை லாரி டிரைவரான பாரதி லாரன்ஸ் கேட்ட போது ஆத்திரமடைந்த நபர், பாரதி லாரன்ஸ் சட்டைப்பையில் வைத்திருந்த லைசென்ஸ், 16,500 ரூபாயை பறித்த காரில் தப்பினர்.போலீசார் விசாரணையில், பாரதி லாரன்ஸ்சிடம் இருந்து பணத்தை பறித்தது, தஞ்சாவூர் ஆர்.டி.ஓ.,வின் கார் டிரைவராக பணியாற்றி வரும் விவேகானந்தன், 49, அவரது நண்பரும், புரோக்கருமான மாதவன், 39, என்பதும் தெரிந்தது. இதையடுத்து, தமிழ் பல்கலை போலீசார் விவேகானந்தன், மாதவன் இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Perumal Pillai
மார் 09, 2025 16:01

எய்தவனை விட்டு விட்டு அம்பை அர்ரெஸ்ட் பண்ணி வைத்துள்ளனர் . RTO - ஐ அர்ரெஸ்ட் பண்ண வேண்டும். அவன் தான் முக்கிய குற்றவாளி .


K.n. Dhasarathan
மார் 09, 2025 14:27

அந்த இருவரையும் தூக்கில் போடவேண்டும், இவர்களே இப்படி என்றால், அந்த ர்.டீ.ஓ. எப்படி ? அடேங்கப்பா , அவருக்கு அமலாக்க துறைதான் அனுப்பனும்.


Ramesh Sargam
மார் 09, 2025 11:50

ஆர்.டி.ஓ.,வின் டிரைவர் இப்படி செய்வான் என்றால், அந்த ஆர்.டி.ஓ., மற்றும் துணை ஆர்.டி.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலக இதர ஊழியர்கள் எவ்வளவு லஞ்சம் வாங்குவார்கள் என்று யோசியுங்கள்.


S. Gopalakrishnan
மார் 09, 2025 11:13

ஆர் டி. ஓ. லஞ்சம் வாங்குவது ஒரு காலம். ஆர். டி. ஓ. வின் ஓட்டுநர் லஞ்சம் வாங்குவது இந்தக் காலம். இனிமேல் ஆர். டி. ஓ. வின் ஓட்டுநரின் நண்பர்கள் லஞ்சம் வாங்க முற்படுவார்கள். திராவிட மாடலின் பரிணாம வளர்ச்சி ! என்னே என் பாக்கியம் !


अप्पावी
மார் 09, 2025 09:37

அந்த ஆர்.டி.ஓ சார் தப்பிச்சுட்டார். இவிங்களையும் ரெண்டு நாள் உள்ளே வெச்சு வெளியே உட்டுருவாய்ங்க.


k.narayanan
மார் 09, 2025 07:24

This is exactly how RTOs are working in TN.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை