உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழனிசாமிக்கு எதிராக திரும்பும் 12 பேர்; சென்னையில் ரகசிய ஆலோசனை

பழனிசாமிக்கு எதிராக திரும்பும் 12 பேர்; சென்னையில் ரகசிய ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்து, 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் குழு வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது இந்த குழுவில் மேலும் 12 பேர் இணைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தலில், 22 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பெற்று, அ.தி.மு.க., தோல்வி அடைந்த நேரத்தில், பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர், தனி குழுவாக சென்று, சேலத்தில் பழனிசாமியை சந்தித்து பேசினர்.அவர்களின் முடிவை நிராகரித்த பழனிசாமி, 'கட்சிக்கு துரோகம் செய்த பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது. ஜானகியை போல சசிகலாவும் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டியவர்; அதை செய்ய சொல்லுங்கள். இருவர் தொடர்பான விஷயத்தில் இது தான் என்னுடைய தீர்க்கமான முடிவு. அவர்கள் இருவரை எந்த ரூபத்தில் கட்சியில் சேர்த்தாலும், அது கட்சிக்குத்தான் கெடுதல். அப்படியொரு ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளமாட்டேன்' என நிர்தாட்சன்யமாக கூறிவிட்டார். இந்த சந்திப்புக்கு பின், அந்த ஆறு முன்னாள் அமைச்சர்களுடன் பழனிசாமி அதிக நெருக்கம் காட்டுவதில்லை என்றும், கட்சி தொடர்பாக எந்த ஆலோசனையும் கேட்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.இந்நிலையில், இக்குழுவில் கூடுதலாக 12 பேர் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. அந்த 12 பேரும் மாவட்டச்செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள். கடந்த வாரத்தில் இவர்கள், சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் நீலாங்கரை வீட்டில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். பன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்தும், பழனிசாமியை வழிக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதித்துள்ளதாக தகவல் பரவி இருக்கிறது. இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பிரிந்தவர்களையும் கட்சிக்கு மீண்டும் கொண்டு வந்து, அனைவரையும் ஒன்றுசேர்க்க விரும்பும் குழுவின் பலம் தற்போது 18 ஆக அதிகரித்துள்ளது. அதனால், அவர்களின் கருத்தை கேட்க வேண்டிய நெருக்கடி, பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே, இணைப்பு விஷயத்தில் பிடி கொடுக்காமல் இருக்கும் அவரை, எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என, 18 பேர் குழு முடிவெடுத்து பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளதைப் போல, சசிகலா, பன்னீர்செல்வம் தரப்பினரிடமும், முயற்சிகள் வெற்றி அடையும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sree
செப் 26, 2024 22:39

ஒரு கட்சியை பற்றிய பொய் செய்தி, ரகசிய செய்தி, ரகசிய சந்திப்பு, தாவல், பதுங்கல் இதெல்லாம் தமிழக ஊடகம் மட்டுமே காசு வாங்கி வேங்கை வயல் தண்ணீர் குடித்து மக்களை ஆதாரம் இல்லாமல் குழப்பும் வேலைகளை செய்யும்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2024 13:33

இப்போதுள்ள நிலைமைப்படி பார்த்தால் மூன்றாவது இடத்துக்கே போராட வேண்டியிருக்கும் .....


கோவிந்தராக
செப் 21, 2024 12:16

தன் நலம் கருதாத உண்மை தொண்டன் ஒருபோதும் ஏற்க மாட்டான் குழுவினர் புறக்கனிக்க படுவார்கள்


Raajanna
செப் 21, 2024 11:52

எடப்பாடி பழனிச்சாமி சரியான பாதையில்தான் முடிவு செய்கிறார். எம் ஜி ஆர் தொண்டர்கள் ஏற்பர்.


K.Thangarajan
செப் 21, 2024 11:17

சசிகலாவை சேர்த்தால் தற்கொலைக்கு சமம்,பன்னீரை ஏற்றுக்கொள்ளலாம்.


மோகனசுந்தரம்
செப் 21, 2024 10:00

எதிரியை நம்பலாம் துரோகியை ஒருக்காலும் நம்ப வேண்டாம்


Sck
செப் 21, 2024 09:57

அதிமுகவா, அப்படினா???


Siva
செப் 21, 2024 09:53

Alliance with BJP will lead to situations like in Maharashtra where Shiv Sena is struggling after its alliance with BJP for years.. ADMK needs a strong leader to unite different factions into one fold - It gives a Kongu Peravai feel for factions from South Tamil Nadu. Jayalalitha had her sway after MGR but the mystery surrounding her passing away is still inconclusive. ADMK should still make alliance with BJP but on a need basis for different platforms (local body, assembly


naranam
செப் 21, 2024 09:12

எப்படியோ, தங்கள் சுயநலத்திற்காக பழனியும் பன்னீரும் அதிமுகவை அழித்து விட்டனர்.


TAMIZ JOSH
செப் 21, 2024 09:00

நிலைபாடு மிக சரி, நீண்ட கால நலன் அதுவே.


முக்கிய வீடியோ