உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாரி இறைக்கப்பட்ட பணத்தை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

வாரி இறைக்கப்பட்ட பணத்தை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தாஜ்பூர்: ஹரியானாவில் திருமண ஊர்வலத்தின் போது வாரி இறைக்கப்பட்ட பணம் கூரையில் விழுந்ததை அடுத்து, அதை எடுக்கச் சென்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் தாஜ்பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பணக்காரர்களில் ஒருவரின் குடும்பத்தில் திருமணம் நடந்தது. இதற்கான ஊர்வலம், தாஜ்பூரின் முக்கிய சாலை வழியாகச் சென்றது. அப்போது, திருமண மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் ஊர்வலத்தில் சென்றவர்கள், ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்தபடி சென்றனர். சாலையில் சிதறி ஓடிய ரூபாய் நோட்டுகளை, அந்த வழியாகச் சென்றவர்கள் எடுத்துச் சென்றனர்.திருமண கோஷ்டியினர் வாரி இறைத்த நோட்டுகளை, பொதுமக்களுடன் சேர்ந்து சாலையில் சென்ற 14 வயது சிறுவன் ஹிமான்ஷுவும் அள்ளிச் சென்றான். சில ரூபாய் நோட்டுகள் அப்பகுதியில் இருந்த வீட்டின் கூரையின் மேல் விழுந்தன. பணத்தின் மீதான ஆசையால், அவற்றை எடுக்க ஹிமான்ஷு ஆவலுடன் ஓடினான். கூரை மீது ஏறி பணத்தை எடுக்கும் போது, அங்கு சென்ற உயரழுத்த மின்சார கம்பியின் மீது சிறுவனின் கை பட்டது. அடுத்த சில வினாடிகளில் ஹிமான்ஷு மீது மின்சாரம் பாய்ந்தது. உடல் முழுதும் தீப்பற்றிய நிலையில், துாக்கி எறியப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானான்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பணத்தை வாரி இறைத்த திருமண கோஷ்டியினரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. உயிரிழந்த சிறுவன் ஹிமான்ஷு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகன் என்றும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nandakumar Naidu.
மார் 09, 2025 15:59

முதலில் இந்த பணத்தை வாரி இறைக்கும் நடைமுறைக்கு தடை விதித்து சட்டம் இயற்றவேண்டும். ஒரு சிறுவனின் உயிர் பறிபோனது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்த பணக்கார குடும்பம் அந்த குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும்.


A P
மார் 09, 2025 22:06

அதுக்குத்தான் நம்ம தமிழக திருட்டுக்கு கட்சிகள், பணத்தை வாரி இறைப்பதில்லை . பணத்தை கையில் கொடுத்து, அந்த திருட்டு கட்சிக்குத்தான் ஓட்டு போடுவேன் என்று சத்தியமும் வாங்கிக்கொள்கின்றன. மீண்டும் அதே பணத்தை, டாஸ்மாக் மூலமாக அந்த திருட்டு கட்சி வசூலித்து விடுகிறது என்பது தெரியாத புத்தி இல்லாத குடிகாரர்கள், மறுபடியும் அந்த கொடியவர்கள் திருடுவதற்காக , தெளிவாக திருடன்களுக்கே ஓட்டு போடுகிறார்கள்.


SP
மார் 09, 2025 13:44

பணத்தை இறைத்தவர்களிடம் கண்டிப்பாக விசாரணை நடத்தி தண்டனை வாங்கி தர வேண்டும்


Petchi Muthu
மார் 09, 2025 10:43

ஆழ்ந்த இரங்கல்


புதிய வீடியோ