உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 2 துணை முதல்வர்: விஜய், திருமாவை கூட்டணிக்கு இழுக்க வலை: பாஜ பச்சைக்கொடி

2 துணை முதல்வர்: விஜய், திருமாவை கூட்டணிக்கு இழுக்க வலை: பாஜ பச்சைக்கொடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வலுவான தி.மு.க., அணியை தேர்தலில் வீழ்த்த விஜய், திருமாவளவன் ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்துள்ள அ.தி.மு.க., தலைமை 'ஒரு முதல்வர், 2 துணை முதல்வர்கள்' என கூட்டணி வியூகத்தை மாற்றியுள்ளது. இந்த வியூகத்திற்கு பா.ஜ., தலைமையும் பச்சைக்கொடி காட்டியுள்ளதை தொடர்ந்து த.வெ.க.,வையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் கூட்டணிக்கு இழுக்க வலை விரிக்கப்பட்டு உள்ளது.ஆளும் கட்சியான தி.மு.க., பணபலம், அதிகார பலம் மற்றும் கூட்டணி கட்சிகள் பலத்துடன், வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது. 10 கட்சிகள் ஆதரவுடன் களமிறங்கும் அந்த அணியை வீழ்த்த, பா.ஜ., ஆதரவு மட்டும் போதாது. அதனால், பா.ம.க., - தே.மு.தி.க.,வை சேர்க்க, பழனிசாமி முயற்சி மேற்கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vv7gqyrk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காததால் தே.மு.தி.க., வுக்கு கோபம்; ராமதாஸ் - அன்புமணி சண்டையால், பா.ம.க.,வில் குழப்பம் என்ற புதிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வின் பாார்வை, விஜய், திருமாவளவன் மீது திரும்பி இருக்கிறது.ஏற்கனவே இந்த முயற்சியில் பா.ஜ., மேலிடம் ஈடுபட்டது. விஜய், திருமாவளவனிடம் பேச்சு நடத்தப்பட்டது; ஆனால் 'ரிசல்ட்' சரியாகவில்லை என்பதால் இம்முறை அப்பொறுப்பை பழனிசாமி ஏற்றிருக்கிறார். அதன்படி கூட்டணிக்கான புதிய வியூகத்தை அ.தி.மு.க., வகுத்திருக்கிறது. மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன, அதே கூட்டணி ஆட்சி திட்டத்தை கொஞ்சம் புதுப்பித்து, 'ஒரு முதல்வர், 2 துணை முதல்வர்கள்' என, மாற்றியிருக்கிறது, அ.தி.மு.க., தலைமை.த.வெ.க., தலைவர் விஜயும், வி.சி., தலைவர் திருமாவளவனும், அ.தி.மு.க., அணியில் சேரும் பட்சத்தில், இருவருக்கும் துணை முதல்வர் பதவிகள் தரப்படும் என்பதே, அ.தி.மு.க., சொல்லப்போகும் செய்தி. அதை மையமாக வைத்து, அ.தி.மு.க., தலைமை நடத்தப் போகும் பேச்சுக்கு, பா.ஜ., தலைமையும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., - வி.சி., - த.வெ.க., அணிசேரும் நிலை வருமானால், அதில் சேர, தே.மு.தி.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளும் முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியொரு பலமான கூட்டணி அமையுமானால், வெற்றி எளிதாகி விடும் என்பதால், அதற்கான முயற்சியில் இறங்க, அ.தி.மு.க., ஆயத்தமாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

panneer selvam
ஜூன் 28, 2025 18:29

VCK is most unlikely to join AIADMK as alliance partner since DMK is actively engaging breaking of PMK . Vijay is not sure till Jan 26 and he may decide based on Prasanth Kishore analysis and advice


Dhanasekaran K
ஜூன் 24, 2025 20:27

த வெ க ஒன்றே போதும்


venugopal s
ஜூன் 22, 2025 22:41

பாஜகவில் புதிதாக சேரும் எல்லோருக்கும் உதவி முதல்வர் பதவி கொடுத்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது!


Kulandai kannan
ஜூன் 22, 2025 16:28

கட்டு சோத்துக்குள் பெருச்சாளிகள்.


Murugan
ஜூன் 22, 2025 13:29

மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் அரசியல் எந்த அளவுக்கு தரம் கெட்டு போய்யுள்ளது ..எந்த அரசியல்வாதியும் மக்களுக்கா உழைக்க முன்வரவில்லை


kr
ஜூன் 22, 2025 12:34

Why no DCM for BJP


Paramasivam
ஜூன் 22, 2025 16:33

May be CM for BJP


Bhaskaran
ஜூன் 22, 2025 11:48

கோபால் நாயக்கர் கட்சிக்கு தொகுதிக்கு 300ஓட்டுகூட கிடையாது


நல்லதை நினைப்பேன்
ஜூன் 22, 2025 08:56

என்னது? தமிழகத்துக்கு வந்த சோதனை. குருமாவுக்கு துணை முதல்வர் பதவியா?


raja selvam
ஜூன் 22, 2025 10:26

சரிதான்.... துணை முதல்வர் பதவி அடுக்குமா...??? என்ன குறை கண்டுவிட்டீர்கள் ஐயா அவர் மீது..?? தற்போதைய அரசியல் சூழலில் கூர்மையான அரசியல் சிந்தனை உள்ள தலைவர்களை பட்டியலிட்டால் அண்ணன் திருமா முதலிடத்தில் இருப்பார்.... நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அவசியம் எங்களுக்கு இல்லை....


visu
ஜூன் 22, 2025 12:16

அது குருமாவுக்கு இல்லை பிஜேபி க்கு குருமா வராவிட்டாலும் கவலையில்லை


புரொடஸ்டர்
ஜூன் 22, 2025 08:50

பாஜகவின் தகிடுதத்த முயற்சிகள் தமிழ்நாட்டில் எந்த பலனும் அளிக்காது.


Oviya Vijay
ஜூன் 22, 2025 07:40

மதிமுகவுடன் பாஜக ரகசிய பேச்சுவார்த்தையில் இருப்பதாக இதுநாள் வரையில் கதை அளந்து விட்டார்கள்... நேற்று தந்தை வைகோவும் மகன் துரை வைகோவும் எந்த காரணத்தைக் கொண்டும் திமுக கூட்டணியை விட்டு வெளியேற தங்களுக்கு எந்த அவசியமுமில்லை என்று பொடணியிலே அடித்தது போல தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டார்கள்... தொடர்ச்சியாக விசிகவையும் தவெகவையும் சீண்டிக் கொண்டிருக்கின்றனர்... அவ்வளவே...


தமிழரசன்,காங்கேயம்
ஜூன் 22, 2025 08:58

புள்ளைக்கு எம்புட்டு அறிவுன்னு பாருங்க...


vivek
ஜூன் 22, 2025 16:27

முருகபக்தர்கள் கூட்டத்தை பார்த்தவுடன் ஓவிய விஜய் தலைமறைவு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை