மேலும் செய்திகள்
மின்வாகனம் இயக்கத்தில் பின்னடைவு; சலுகையை நீட்டிக்குமா தமிழக அரசு?
5 hour(s) ago | 1
சிந்தனைக்களம்: தேசியத்தின் கவிதை...நவீன இந்தியாவின் சிற்பி
7 hour(s) ago | 1
சென்னை :கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி இரண்டு தொகுதிகளை கேட்பதால், தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சை, தி.மு.க., துவக்கியுள்ளது. அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், ஜனவரி 28ல், காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தினர்.அடுத்தடுத்து வி.சி., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணியில் கமல் சேர்வது உறுதி செய்யப்பட்டாலும், ஏற்கனவே அதிக கட்சிகள் இருப்பதால், கமல் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ.,விடம் தோல்வி அடைந்த கமல், லோக்சபா தேர்தலில் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற நினைக்கிறார். ஆனால், அத்தொகுதியில் வென்ற மார்க்சிஸ்ட் கட்சி விட்டுக் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.கோவை இல்லாவிட்டால், தென்சென்னையை கமல் கேட்கிறார். ஆனால், சென்னை மாநகரில் எந்த தொகுதியையும் விட்டுக் கொடுக்க, தி.மு.க., தயாராக இல்லை. கோவை அல்லது தென் சென்னை தவிர, மற்றொரு தொகுதியையும் கமல் கேட்பதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியாமல் தவிக்கும் போது, கமல் கட்சி இரண்டு தொகுதிகளை கேட்பது, தி.மு.க.,வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
5 hour(s) ago | 1
7 hour(s) ago | 1