உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திரும்ப வராத 30 சதவீத வெளி மாநில தொழிலாளர்கள்: திட்டமிட்டபடி மெட்ரோ பணிகளை முடிப்பதில் சிக்கல்

திரும்ப வராத 30 சதவீத வெளி மாநில தொழிலாளர்கள்: திட்டமிட்டபடி மெட்ரோ பணிகளை முடிப்பதில் சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சொந்த மாநிலங்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் 30 சதவீதம் பேர், வேலைக்கு திரும்பாததால், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணிகளை திட்டமிட்டபடி, 2028 இறுதிக்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னையில் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில், 118 கி.மீ., துாரத்திற்கு, 63,246 கோடி ரூபாயில், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதாவது, 45 கி.மீ., மாதவரம் -- சிப்காட்; 26.1 கி.மீ.,மேலும், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ்; 47 கி.மீ., மாதவரம் - - சோழிங்கநல்லுார் இடையிலான பணிகளை, 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்து வந்து, மெட்ரோ பணியில் பிற மாநில ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபடுத்தி உள்ளன.இருப்பினும், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களில், 30 முதல் 40 சதவீதம் பேர் மீண்டும் வேலைக்கு திரும்பவில்லை. அவர்கள், தங்களின் சொந்த ஊர்களில் வேறு பணிகளுக்கு செல்கின்றனர். சென்னை மெட்ரோ பணியில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், பலர் அருகே உள்ள மாநிலங்களில் நடக்கும் மெட்ரோ பணிகளில் இணைந்து உள்ளனர்.சென்னை மெட்ரோ திட்டப் பணிகளில் பெற்ற அனுபவம், அவர்களுக்கு உள்ளூரில் பிற திட்டப்பணிகளை எளிதாக மேற்கொள்ள முடிவதாக தெரியவந்து உள்ளது.தொழிலாளர் பற்றாக்குறையால், சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை திட்டமிட்டப்படி, 2028க்குள் முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மெட்ரோ ஒப்புதல்

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி தடத்தில்தான், 30 சதவீதம் வரை ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, கூடுதல் பணியாளர்கள் நியமிப்பதோடு, தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் வேலை மாற்றங்களை செய்து வருகிறோம்.பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் தடத்தில் ஆட்கள் பற்றாக்குறை இல்லை. சுரங்கப்பாதை நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளில், 10 சதவீதம் வரை ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த தடத்தில், ஏற்கனவே திட்டமிட்டப்படி, மெட்ரோ ரயில் பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம். மூன்று வழித்தடங்களிலும், 2028 டிசம்பரில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.ஆட்கள் பற்றாக்குறையால் மட்டுமே பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்படாது. நிலம் கையகப்படுத்துவது, ஒப்பந்த பணிகள் வழங்குவதில் தாமதம் மற்றும் அடையார், திருவான்மியூர், ஆயிரம்விளக்கு உள்ளிட்ட இடங்களில், பெரிய பாறை கற்களை அகற்றுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் எழுந்தன.எனவே, சில பகுதியில் மட்டும், பணிகளை திட்டமிட்டப்படி முடிப்பதில் சிக்கல் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதியவர்களை

அழைத்து வர ஏற்பாடுதொழிலாளரை அழைத்து வரும் தனியார் நிறுவன அலுவலர்கள் கூறியதாவது: கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்தாரர்கள் கூறுவதை போல், தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருகிறோம். சில ஆண்டுகளாக சென்னையில் பணியாற்றிவிட்டு, சொந்த மாநிலங்களுக்கு செல்வோரில் சிலர், மீண்டும் இங்கு வருவதில்லை. குடும்ப சூழல், உள்ளூரில் புதிய வேலை வாய்ப்பு, வேறு இடங்களில் கூடுதல் சம்பளம் போன்றவை இதற்கு காரணம். இருப்பினும், பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு நிகரமாக, புதிய தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருகிறோம். புதிய தொழிலாளர்கள் வந்து, பணியை துவங்க சிரமப்படுகின்றனர். பணிகளை கற்றுக்கொள்ள ஓரிரு மாதங்கள் ஆகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Thiyagarajan S
நவ 04, 2024 07:06

உண்டியல் கட்சிக்காரனுங்க கமிஷன் அடிக்க நல்ல வாய்ப்பு


Tetra
நவ 03, 2024 15:53

வடக்கன் வடக்கன் எங்கு பார்த்தாலும் வடக்கன். தமிழன் வேலை பறிபோகிறது என்று கூக்குரல் போட்டீர்களே. ஏன் தமிழனை வைத்து அரசாங்கமும் சீமானும் நேற்றைய காளான் ஜோஸப்பும் வேலையை முடிக்க வேண்டியதுதானே


konanki
நவ 03, 2024 11:59

திருட்டு டாஸ்மாக் டுபாக்கூர் போதைப்பொருள் கடத்தல் திராவிஷங்கள் உழைப்பு வேலை என்றால் அலர்ஜி. இடத்தை உண்டே ஓடி விடுங்கள்.ஆனால் ரூபாய் 200, குவார்ட்டர் சாராயம் காக்கா பிரியாணி க்கு வாழ்க/ஒழிக கத்தும் டாஸ்மாக் டுபாக்கூர் திராவிஷங்கள்


Rpalnivelu
நவ 03, 2024 05:42

ப்ரீ 200 ரூவா காக்க கால் பிரியாணிக்கும் குவார்டருக்கும் அலையும் டுமீளங்கள் வேலை செய்யலாமே


செந்தில்குமார்
நவ 03, 2024 04:28

இதுபோன்ற பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் உள்ளூர் ஆட்களை அழைப்பதே இல்லை. வடமாநில தொழிலாளிகளுக்கு குறைந்த ஊதியம் கொடுத்தால் போதுமானது.அதேநேரம் தொழிலாளர் விதிமுறைகளை காலில் போட்டு மிதித்து விட்டு பன்னிரண்டு மணி நேரம் கூட வேலை வாங்கலாம். அது உள்ளூர் ஆட்களிடம் நடவாது என்பதால் இவர்களை அழைப்பதே இல்லை


Tetra
நவ 03, 2024 15:55

முதலில் ஆட்கள் எங்கே? டாஸ்மாக் வாசலில் அல்லவோ கிடக்கிறார்கள்


R K Raman
நவ 02, 2024 16:32

வடக்கனுக்கு எதற்கு இங்கு வேலை என்றவர்களை வைத்துக் கொண்டு செய்யலிமே 200க்கு மேலும் கிடைக்கும்


Ram pollachi
நவ 02, 2024 10:41

அரசியல் கட்சி கூட்டம், மாநாடு, தேர்தல் சமயங்களில் எல்லா வேலைகளையும் செய்வது வெளி மாநில தொழிலாளர்கள் தான்... நல்ல குடும்ப பின்னணி , படிப்பறிவு, அமைதியாக வாழ நினைப்பவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் வருவது கிடையாது.


தமிழ்வேள்
நவ 02, 2024 10:34

டாஸ்மாக் ஐ இழுத்து மூடினால் தவிர மற்ற மாநில ஆட்கள் வேலைக்கு வருவது கஷ்டம்..டுமீலனுக்கு குடிக்க சாராயம் இருந்தால் போதுமானது.வேலை வெட்டி கவுரவம் எல்லாம் அனாவசியம்.


karthik
நவ 02, 2024 08:44

காங்கிரஸ் கட்சியால் நாட்டிற்ற்கு எந்த பலனும் இல்லை மாறாக சிக்கல் தான்.. அதே போல திராவிட கும்பல்களால் தமிழ் நாட்டிற்கு எந்த பலனும் இல்லை சிக்கல் தான் தினம். தமிழ் நாடு ஆட்களை கூப்பிடுங்கள் வேலைக்கு.. காலையில் வந்து மாலையில் 4 மணிக்கே குடிக்க போய்விடுவான் வேலையும் ஒழுங்கா செய்யமாட்டான்.


Suresh sridharan
நவ 02, 2024 07:43

டி எம் கே ஏ டி எம் கே சீமான் விஜய் இவங்கெல்லாம் சொல்ற மாதிரி எங்க ஆளுங்களுக்கு தான் வேலை கொடுப்போம் என்று சொன்ன இவர்கள் தங்களது கட்சி காரர்களை பணிக்கு அனுப்புவார்களா இதில் முக்கியமான ஒருவரை அழைத்து ஆக வேண்டும் மிஸ்டர் சைமன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்


புதிய வீடியோ