உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சி மேலிடத்தில் 4 பக்க புகார் மனு

செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சி மேலிடத்தில் 4 பக்க புகார் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக காங்கிரசில் அதிருப்தியில் உள்ள 15 மாவட்ட தலைவர்கள், டில்லியில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கரை சந்தித்து, செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக செயல்படுவதாக நான்கு பக்க புகார் மனு அளித்துள்ளனர்.கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், முன்னாள் தலைவர் அழகிரி, முன்னாள் எம்.பி.,க்கள் செல்லகுமார், ஜெயகுமார் போன்றவர்களுக்கு 'சீட்' கிடைக்கவில்லை. அவர்களும், அவர்களின் ஆதரவு மாவட்ட தலைவர்களும், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக செயல்பட துவங்கி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4a6li7sd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், 10 எம்.எல்.ஏ.,க்களும் அவருக்கு எதிராக செயல்படுகின்றனர். சமீபத்தில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவரின் வீட்டில், அந்த 10 பேரும் கூடி, ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கிரிஷ் ஜோடன்கர் நியமிக்கப்பட்டார். அதிருப்தி மாவட்ட தலைவர்கள் திரவியம், செங்கம் குமார், டீக்காராம் உட்பட 15 பேர், கடந்த 18ம் தேதி டில்லி சென்று, கிரிஷ் ஜோடன்கரை சந்தித்து பேசினர். அப்போது, 'மாவட்ட தலைவர்கள் நியமனத்தில், செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக செயல்படுகிறார்' என, நான்கு பக்க புகார் மனு அளித்தனர்.'சிறப்பாக செயல்படும் மாவட்ட தலைவர்களை மாற்ற மாட்டோம். மற்ற விவகாரங்களை, நான் இன்னும் நான்கு நாட்களில் சென்னைக்கு வந்ததும் பேசி முடிவெடுக்கலாம்' என கூறி, அவர்களை சென்னைக்கு செல்லும்படி கிரிஷ் அனுப்பியுள்ளார்.ஆனாலும், அவர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து, காங்., கட்சியின் தலைவர்களான ராகுல், கார்கே, வேணுகோபாலை சந்தித்து விட்டு தான் சென்னை செல்வது என பிடிவாதமாக உள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ManiK
பிப் 21, 2025 15:59

திமுக கிட்ட பெருந்தொகை வாங்கிட்டார் போல இந்த பெருந்தகை. காங்கிரஸ் தலைமை நிச்சயமாக கண்டுகொள்ளாது.


PARTHASARATHI J S
பிப் 21, 2025 15:24

என்ன இது பக்கங்கள் குறைச்சலாக இருக்கே ! நான் எதிர்பார்த்தது குறைந்த பட்சம் நூறு பக்கங்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 21, 2025 12:33

காங்கிரஸ் கட்சியினர் எப்பொழுதுமே முட்டாள்கள் என்பதை நிரூபித்து கொண்டே உள்ளார்கள். புகார் மனு கொடுக்க வேண்டும் என்றால் தமிழக முதலமைச்சரிடம் அறிவாலயம் சென்று கொடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு பட்டயம் எழுதி கொடுத்து வருடம் முப்பது கழிந்து போய் விட்டது. 90 வருட குத்தகைக்கு திமுக எடுத்துள்ளது. இது தெரியாமலேயே இன்னும் காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் உள்ளது விந்தையாக உள்ளது.


RAAJ68
பிப் 21, 2025 11:42

ரவுடிக்கு ஏற்ற வகையில் ஒரு முகம் இயற்கையாக அமைந்துள்ளது. காலம் சரியான நேரத்தில் தண்டனை கொடுக்கும்.


kamal 00
பிப் 21, 2025 10:02

பாவம் திமுக உறுப்பினர் மீது காங்கிரஸ் எப்படி புகார் மனு அளிக்கலாம்? உடன் பிறப்பை முதல்வர் கை கழுவமாட்டார்