உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 6 மாஜிக்களின் எதிர்கோஷ்டிகளை கொம்பு சீவி விட பழனிசாமி முடிவு?

6 மாஜிக்களின் எதிர்கோஷ்டிகளை கொம்பு சீவி விட பழனிசாமி முடிவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க.,வில் ஒற்றுமை முயற்சியை மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேருக்கும் 'செக்' வைக்கும் வகையில், அவர்களின் சொந்த மாவட்டங்களில் உள்ள எதிர்கோஷ்டிகளை கொம்பு சீவி விட, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தன. இந்த தோல்விக்கு பின், பிரிந்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோர் கூறி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dow9i78e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களின் அறிவிப்பை நிராகரிக்கும் வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, இனி ஒருபோதும் இடமில்லை' என்று கூறி வருகிறார். ஆனால், அ.தி.மு.க.,வில் ஒற்றுமை முயற்சியை மேற்கொள்ள விரும்பும், ஆறு முன்னாள் அமைச்சர்கள் கொண்ட குழுவினர், பழனிசாமியிடம் ஏற்கனவே ஒருமுறை முறையிட்டனர். அதை பழனிசாமி ஏற்கவில்லை. அதோடு, எதிரிகளோடு தொடர்ந்து அவர்கள் தொடர்பில் இருக்கின்றனர் என்ற கோபமும் பழனிசாமிக்கு ஏற்பட்டுஉள்ளது.இந்நிலையில், பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பில் தலா ஆறு பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் தரப்பிலான குழுவுக்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும்; சசிகலா சார்பில் அமைக்கப்பட்ட குழுவுக்கு முன்னாள் கொறடா நரசிம்மனும் தலைமை தாங்குகின்றனர்.இவர்கள் தலைமையில் இடம் பெற்றுள்ள குழுவினர், அ.தி.மு.க.,வில் ஒற்றுமை முயற்சியை மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய ஆறு பேர் குழுவிடம், கட்சி ஒற்றுமையை வலியுறுத்தி தொடர்ந்து ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'கட்சியை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய்விட்டனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நான்கு பேரை, மீண்டும் இணைப்பது என்ற பேச்சுக்கே இமில்லை' என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.இதையடுத்து, கட்சி ஒற்றுமைக்கு முயற்சிப்போரின் செயல்பாடுகளை, முயற்சியை முடக்கி போடும் வகையிலான பேச்சு என, பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் அப்செட் ஆகி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.,வில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு 'செக்' வைக்கும் வகையில், அவர்கள் சார்ந்துள்ள மாவட்டங்களில் உள்ள கட்சியின் எதிர்கோஷ்டியினருக்கு முக்கியத்துவம் தந்து, கொம்பு சீவி விடவும், பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Muralidharan S
செப் 23, 2024 13:05

முற்றிலும் அழிந்து போகவேண்டிய திராவிஷ கட்சிகளில், ஏறக்குறைய அழிந்து கொண்டு இருக்கும் கட்சி நல்ல விஷயம்தான் இது . அடுத்த தேர்தலுக்கு பிறகு முற்றிலும் காணாமல் போய்விடும். அதற்க்கு அடுத்த தேர்தலில், மற்றதும் காணாமல் போய்விடும். பத்து வருடங்களுக்கு பிறகு இந்த கட்சிகள் எதுவுமே இருக்காது.. நல்லது நடக்க கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்...


குமரன்
செப் 23, 2024 12:28

எடப்பாடி கட்சியை திமுகவிடம் அடகு வைக்காமல் விடமாட்டார் அதற்கான தடங்கல்கள் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்


N.Purushothaman
செப் 23, 2024 09:59

மொத்தத்துல கட்சி டமால் ...தலைமை பணால் ...


Suresh sridharan
செப் 23, 2024 08:58

குழி தோண்டுவது அஸ்திவாரத்திற்கா அகாலத்திற்கா என்று தெரியாத சில அரசியல்???


ராஜமோகன்.V
செப் 23, 2024 08:11

இவர் குல்லா போட்ட நவாப்பாக கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுதலை செய்யணும்னு சொன்னப்பவே எப்பேர்ப்பட்ட பிராடுன்னு தெரிஞ்சிடுத்து. இவர் ஒரு வாழும் “அமைதிப்படை அமாவாசை”


பேசும் தமிழன்
செப் 23, 2024 08:58

குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியது,.... SDPI போன்ற மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க போதே.... கிடைக்கும் ஓட்டையும் கிடைக்காமல் செய்து விட்டார்..... அதனால் பிஜெபி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அநேக இடங்களில் இரண்டாம் இடத்துக்கு வந்து விட்டது..... எல்லாம் நம்ம எடுபிடி வேலை தான்.


கோவிந்த ராசு
செப் 23, 2024 03:40

சரியான நிலைப்பாடு


A Viswanathan
செப் 23, 2024 10:25

கேடுவான் கேடு நினைப்பான்.


முக்கிய வீடியோ