உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் தொங்கு சட்டசபை!

தமிழகத்தில் தொங்கு சட்டசபை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பக்கத்து நாட்டு தலைமை நீதிபதி சமீபத்தில் டில்லி வந்திருந்தார். அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதில் மத்திய அரசின் மூத்த ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்றனர். வட்ட வட்ட டேபிள்களில், அதிகாரிகள் அமர்ந்து, 'கிசுகிசு' பேசியபடி சாப்பிட்டனர்.அரசியல்வாதிகளுக்கு மக்களின் மனநிலை எந்த அளவிற்கு தெரியுமோ, அதை விட அதிகம் தெரிந்து வைத்திருப்பவர்கள் இந்த அதிகாரிகள். ஒரு டேபிளில், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அவர்களின் பேச்சு, 2026 தமிழக சட்டசபை தேர்தல் பக்கம் திரும்பியது.ஒரு சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரி, 'நான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்தேன். அவர், 'பழனிசாமி, தி.மு.க.,வின் ஆள்' என சொல்கிறார்; இதை உள்துறை அமைச்சரிடமும் தெரிவித்தேன்' என்றார். இதை கேட்ட மற்ற அதிகாரிகள், 'அது எப்படி சாத்தியம்?' என கேட்டனர்.ஆனால் ஒரு விஷயத்தை அந்த ஐ.பி.எஸ்., அதிகாரி மறைத்துவிட்டார். அதிகாரி சொன்னதை கேட்டு கோபமடைந்த அமித் ஷா, 'உங்களுக்கு தமிழக அரசியல் தெரியவே இல்லை. தி.மு.க.,வை எதிர்த்து உருவாக்கப்பட்டது தான், அ.தி.மு.க., அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான்கு ஆண்டுகள் பழனிசாமி முதல்வராக இருக்க, மோடி தான் உதவி செய்தார். தி.மு.க.,வை தோற்கடிப்பது தான், அவர் உட்பட எங்களது குறிக்கோள்' என, அந்த ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் சொன்னாராம்.'விஜயின் கட்சிக்கு எத்தனை சதவீத ஓட்டுகள் கிடைக்கும்; அவரால் தனியாக ஆட்சி அமைக்க முடியுமா? விஜயால் தி.மு.க,.விற்கு சாதகமா பாதகமா' என, பல விஷயங்களை இந்த விருந்தில் அதிகாரிகள் பேசிக் கொண்டனராம். மத்திய அரசின் மிக மூத்த அதிகாரி தமிழக அதிகாரிகளின் பேச்சை கேட்டு விட்டு, 'இந்த முறை தமிழகத்தில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது; பொறுத்திருந்து பாருங்கள்' என்றாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

முருகன்
டிச 28, 2025 09:24

விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்ற உடன் வித விதமாக செய்திகள் வருகிறது


Nagercoil Suresh
டிச 28, 2025 04:57

தமிழக சட்ட சவை நிலவரம் இந்த முறை கணிப்பதற்கு மிக மிக கடினமாக தான் உள்ளது அதை மறுக்க யாராலும் முடியாது, இன்னும் இரண்டு வாரங்களில் ஓரளவுக்கு தெரிந்துவிடும்..இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என தெரிந்தால் ஆட்சி அமைக்கும் கட்சியை கணித்துவிடலாம்..தற்போதய கணிப்பில் ஆளும் கட்சி சிறிய அளவில் முன்னணியில் உள்ளனர்..விஜயின் கட்சி ஆதிமுக வாக்குகளை அதிகம் பிரித்தால் தி மு க விற்கு பூஸ்ட்டாக அமைந்துவிடும்..பன்னீர் தினகரன் விஜய் கட்சியிடம் கூட்டணி அமைத்தால் மிக பெரிய அளவில் அதிமுக விற்கு சறுக்கலை உண்டு பண்ணும்... தெமுதிகவை தி மு க பக்கம் இழுத்தால் விஜயால் வரும் இழப்பை அது சரிப்படுத்தும், எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் வரும் தேர்தலை கணிப்பதற்கு கடினம் தான் அதே நேரம் விஜயால் தொகுதி வாரியாக அதிக வெற்றியை சாத்தியமாக்க முடியாது, ஆக தொங்கு சட்டசவை அமைவதற்கு வாய்ப்புகள் தற்போத நிலையில் மிக குறைவு தான்....


அருண் பிரகாஷ் மதுரை
டிச 28, 2025 03:51

அந்த ஐ பி எஸ் அதிகாரி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.. பழனிசாமி திமுகவின் மறைமுக ஆதரவாளராக பல விஷயங்களில் செயல்பட்டு கொண்டு உள்ளார்.. தமிழகத்தில் திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு இருப்பது உண்மை.. ஆனால் அதை ஓட்டாக அறுவடை செய்ய வேண்டிய பழனிசாமி அதிமுக கட்சியை தன் வசம் வைத்திருப்பதில் மட்டுமே கவனமாக உள்ளார்.. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் போன்றோர் அதிமுக முகங்கள்..அவர்களால் கட்சிக்கு ஆதாயம்.. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் அம்மா காலத்தில் இருந்தே மறைமுக அரசியலுக்குள் ஈடுபட்டவர்கள்.. ஆனால் தன்னுடைய சொந்த ஆதாயம் கருதி அனைவரையும் ஒதுக்கி விட்டு பழனிசாமி திமுக வெற்றி பெற உதவுகிறார் என்பதே நிதர்சனமான உண்மை..


Govindharajan R
டிச 28, 2025 07:26

வெற்றிக்கு ஓரளவு வாய்ப்பிருந்த வாய்ப்பை எடப்பாடியின் சுயநலத்தால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றது. பாராளுமன்றத் தோல்விக்கும் அவரே காரணம். வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை முகஸ்டாலின் அதிமுக விற்கு தட்டில் வைத்துக் கொடுக்கிறார் அவரின் ஆட்சி அலங்கோலத்தால். அதை சுயநலத்தால் தட்டிவிடுகிறார் எடப்பாடி. அதிமுக அழிவிற்கு இவரே காரணமாகப் போகிறார். கடவுள் எம்ஜிஆர் தான் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்.


A viswanathan
டிச 28, 2025 08:39

திரு.அருண் பிரகாஷ் சொல்வது சரி


மேலும் செய்திகள்











புதிய வீடியோ