வாசகர்கள் கருத்துகள் ( 50 )
யார் அந்த பைரவி ? நாடெங்கும் நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு பெருகிக்கொண்டே போகிறது. இறுதியில், மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட நாய்களின் எண்ணிக்கை பெருகி, இது "பாரத தேசம்" என்பதற்குப்பதிலாக, "நாய் தேசம்" என்றாகி விடக்கூடும். தெரு நாய்களிடம் கடி பட்டு, உங்கள் வீட்டில் உள்ள உங்கள் உறவினர்கள் யாராவது, ஆஸ்பத்திரியில் இறந்து போனால், நீங்கள் என்ன செய்வீர்கள் ? ஒருவருடைய கஷ்டத்தை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.... இது தேசத்தையே உலுக்கும் பிரச்சனை.. நாய்க்கடிக்கான, மருந்துகளின் விலை உங்களுக்குத் தெரியுமா ?
திமிர் , ஆணவம் , சுயநலம் பிடித்தவன் மனிதன். உலகில் வாழ தனக்குத்தான் உரிமை உண்டு என நினைக்கிறான் மனிதன். ஒவ்வொரு வீட்டிலும் - தினமும் இரவு உணவுக்குப்பின் - ஒரு கைப்பிடி சோறு - நாய்க்கு கொடுத்தால் போதும் ஒரு நாய்க்கடி சம்பவமும் நடக்கவே நடக்காது காடுகளும் மரங்களும் தான் - விலங்குகளின் உணவுக்கு மூலம் அறிவற்ற , சுயநலம் பிடித்த மனிதன் காடுகளையும் மரங்களையும் அழித்து விலங்குகளை பட்டினி கிடக்க விட்டான் நாய்களுக்கு தினமும் உணவு வழங்குவது மனிதனின் கடமை
இது நீதிமன்றத்தில் வந்த அற்புதமான தீர்ப்பு. இதை விட ஜீவகாருண்யம் மிக்கதொரு தீர்ப்பு இருக்க முடியாது. இந்தியாவில் பிறந்துவிட்ட காரணத்தாலேயே நாய்கள் கேட்பாரற்று தெருவில் வெயிலிலும் மழையிலும் வாடி பிச்சை எடுத்து வீசி எறியப்படுவதை உண்டு வாழ வேண்டுமா என்ன. அவை ஏன் ஒரு காப்பகத்தில் இருக்கக்கூடாது. விலங்குப்பிரியர்கள் அங்கு சென்று உணவிடலாமே. அல்லது ஒன்றை தத்தெடுத்து வீட்டில் வைத்து வளர்க்கலாமே. நம்மில் சிலர், வெளிநாட்டில் unskilled workmen கூட BMW காரில் வருகிறார்கள் என்று அங்கலாய்ப்பதுண்டு. இதை தெருநாயின் கோணத்தில் பாருங்கள். அது இப்படி நினைக்கிறது. தன் இன நாயை வெளிநாட்டில் unskilled workmen கூட தன் பின் இருக்கையில் BMW காரில் அழைத்துச் செல்கிறார். இங்கு இவர் ரொட்டி துண்டை வீசிவிட்டு தான் காரில் சென்று விடுகிறார் என்று நினைத்தால் எப்படியிருக்கும். தெரு நாய்க்கு உணவிடும் யாரும் ஒருவரும் அதை பீச் சினிமா கோயில் என்று காரில் அழைத்துச் செல்வது தானே.
கட்டுரையாளர் நாய் துரத்திய அனுபவம் இல்லை போல்...
கண்டிப்பாக இந்த கட்டுரை ஏற்றுக்கொள்ள முடியாது. இரவு நேரத்தில் தனி ஒரு ஆளாகா நடந்து செல்ல முடியாது. பைக்கில் செல்லவும் முடியாது. கட்டுரை எழுதுவது மிகவும் எளிது. அதனுடைய வலி அனுபவம் உள்ளவருக்கு மட்டுமே புரியும்.
கட்டுரையாளர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தையும் சோகத்தையும் ஈடு செய்ய முடியாத இழப்பையும் கேட்டிருக்கவோ அல்லது பாரத்திருக்க மாட்டார் என்பது நன்றாக தெரிகிறது. 30- 40 ஆண்டுகளுக்கு தெருவில் திரி்ந்த நாய்களுக்கும் இன்றைக்கு இருக்கும் தெருநாய்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மனிதர்கள் கொடூரமாக மாறிவிட்டதைப்போல விலங்குகளும் கொடுரமாக மாறிவிட்டன. நாய்க் கடியில் பரவும் ரேபிஸ் கிருமிகள் மனிதர்களுக்கு மிக ஆபத்தானது என்பதை பலதடவை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.
நாயின் மேல் அவ்வளவு பாசமும் அக்கறையும் உள்ளவர்கள், அவர்கள் ஊரில் உள்ள எல்லா தெரு நாய்களையும் அவர்கள் வீட்டில் வைத்து வளர்கட்டும்.
இந்த கட்டுரையை எழுதியவர் நிச்சயமாக காரில் சென்று வருபவராக தான் இருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு தனியாகவே நடந்து வந்திருக்கிறோம் இப்பொழுது அது முடியாது அதாவது இந்த கட்டுரையாளருக்கு தெரியுமா? இவரது கருணையை ஆடு மாடு கோழி என்று எந்த இடஞ்சலும் தராத உயிரினத்திலும் காட்டலாம்.
நாய்கள் ஒரு காட்டு விலங்கு உயிரினம். விலங்குகள் எப்போதும் கூட்டமாக சேர்ந்தால் மற்றொரு உயிரினத்தை தாக்குவது அதன் இயல்பு. மனிதனால் காட்டில் வாழ முடியாது என்பதனால்தான் காட்டை விட்டு வெளியேறி கூட்டங்களாக சமுதாயங்களாக வாழத் தொடங்கினர். அது போல் காட்டு விலங்குகளும் காட்டில் வாழ்வதுதான் சிறந்தது
எனது மகள் anxiety பிரச்சனையிலிருந்து விடுபட்டது ஒரு தெருநாயால்தான். ஆனாலும், 1. தேவையானவர்கள் லைசென்ஸ் வாங்கி வீட்லயே வளர்க்க வேண்டும். 2. அனைத்து தெருநாய்களுக்கும் ஆபரேஷன் செய்து விடவேண்டும். 3. அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி ஒவ்வொரு வருடமும் போட வேண்டும். 4. அனைத்து தெருக்களிலும், ஊர்களிலும் நாய்கள் எண்ணிக்கையை கால்நடை மருத்துவமனைகள் அல்லது சுகாதாரத் துறை கண்காணிக்க வேண்டும். 5. இதில் பொதுமக்கள் உதவியுடன் அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் மூர்க்கத்தனமானவற்றை உடனடியாக பிடித்து தனிக் கொட்டகைளில் அடைத்துப் பராமரிக்க வேண்டும். 6. நாய் தொல்லை புகார் எண் அரசு உருவாக்க வேண்டும். 7. நாய்த் தொல்லை தன்னார்வலர்கள் குழுக்கள் உருவாக்க வேண்டும். இன்னும் பல செயல்களை அனைவரும் சேர்ந்து யோசித்தால், பதில்கள் கிடைக்கும். இவ்வாறாக மனிதர்கள்-நாய்கள் CONFLICTS உருவாகாமல் தடுக்க முடியும். நன்றி வணக்கம்.