உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துரோகம் செய்பவர் கட்சிக்கு புற்று நோய்

துரோகம் செய்பவர் கட்சிக்கு புற்று நோய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ, நேற்று அளித்த பேட்டி: தமிழக கவர்னர் ரவி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ்., கொள்கை பரப்பு செயலராகவே செயல்பட்டு வருகிறார். ஒரு கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னைகளை தீர்க்க, அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்துகளைக் கேட்டு தலைமை முடிவெடுக்க வேண்டும்.கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் குறித்து ஆதாரங்களுடன் தகவல் வந்தால், தலைமை அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அது புற்றுநோய் போல் பரவி, இயக்கத்தை அழித்து விடும்.தி.மு.க., கூட்டணியை வலுவூட்டும் விதமாக ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கூட்டணிக்குள் எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாத வகையில், அனைவருடைய செயல்பாடுகளும் இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு கேட்டு, காங்., சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு அக்கட்சித் தலைவரே நடவடிக்கை எடுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

c.mohanraj raj
ஏப் 15, 2025 22:12

உங்கள் தகப்பனை விட மிகப்பெரிய துரோகி யாரும் கிடையாது


yts
ஏப் 15, 2025 20:21

உங்களைப் பற்றி நன்றாக கணித்து கூறியுள்ளீர்கள் பாராட்டுக்கள்


பேசும் தமிழன்
ஏப் 15, 2025 19:16

உன் அப்பனை விட பெரிய துரோகி வேறு யார் இருக்கிறார்கள்.... அவருக்காக தீக்குளித்து செத்த ஆட்களின் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு.... தனக்கும்.... தன் மகனுக்கும் MP பதவி வேண்டி... யாரை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினாரோ.... அதே கட்சியிடம் பிச்சை வாங்கி... தங்களது பிழைப்பை மட்டும் பார்த்து கொண்டார்.


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
ஏப் 15, 2025 11:33

நாட்டை பிடித்த புற்று நோய் தான் ....


கிருஷ்ணதாஸ்
ஏப் 15, 2025 11:07

முன்னுரையில்: கவர்னரையோ, மத்திய அரசையோ திட்ட வேண்டும். பொருளுரையில்: உட்கட்சி எதிரிகளை திட்டி, மிரட்ட வேண்டும். முடிவுரையில்: திமுகவுக்கு ஜால்ரா அடித்து முடிக்க வேண்டும்.


Suresh sridharan
ஏப் 15, 2025 10:47

எப்படி நீங்க ....


Radhakrishnan Seetharaman
ஏப் 15, 2025 09:59

மல்லை சத்யா கட்சிக்காக உழைத்த தனக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறியிருந்தார். இப்போது துரை வைகோ அதே சொல்லாடலை வைத்து சத்யாவை தாக்குவது, மனிதாபிமானமற்ற செயல்.


Velayutham rajeswaran
ஏப் 15, 2025 09:47

மதிமுக போன்ற ஐந்தாம் படை கட்சிகள் தமிழனுக்கு பெரும் புற்றுநோய்


S. Gopalakrishnan
ஏப் 15, 2025 09:39

வந்துட்டாங்கையா வந்துட்டாங்க ....


Rajasekar Jayaraman
ஏப் 15, 2025 09:24

அப்போ முதலில் உன் அப்பாவை தான் சொல்ல வேண்டும் திமுகவிலிருந்து பிரிந்த போது எத்தனை தொண்டர்கள் உயிர் விட்டார்கள் இன்று ஒரு எம்பி ஒரு எம்எல்ஏ சீட்டுக்கு கட்சியை காட்டிக் கொடுத்த ....


முக்கிய வீடியோ