உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விபத்தா... சதியா: புது அர்த்தம் சொல்லும் திருமாவளவன்

விபத்தா... சதியா: புது அர்த்தம் சொல்லும் திருமாவளவன்

சென்னை : 'திருமாவளவன் காரை நிறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும்' என, வி.சி., சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வி.சி., துணை பொதுச்செயலர் ரஜினி காந்த் அளித்துள்ள புகார்:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கறிஞர் ராக்கேஷ் கிஷோர் நடத்திய, அவமதிப்பு தாக்குதலை கண்டித்து, வி.சி., வழக்கறிஞர் அணியின் சார்பில், அக்.,7 ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அவர் மதியம், 2:30 மணிக்கு புறப்பட்டபோது, அவரது வாகனத்தை வழக்கறிஞர் ராஜிவ்காந்தி என்பவர், தன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கண்காணித்தார். அதன் பின், எங்கள் கட்சி தலைவர் வாகனத்தை மறிப்பது போல், இரு சக்கர வாகனத்தில் சென்றார். அங்குள்ள வேகத்தடையில், திருமாவளவன் காரை வழி மறித்தார். பின்னர் எங்கள் கட்சி தலைவரை நோக்கி வந்து ஆபாசமாக திட்டினார். அவரை போலீசார் தடுக்க முயன்றனர். அதையும் மீறி, எங்கள் தலைவரை நோக்கி தாக்குதல் நடத்த பாய்ந்து வந்தார். அவரை போலீசாருடன் சேர்ந்து, எங்கள் கட்சியினர் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து, முறைப்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். திருமாவளவனை தாக்க முயன்ற வழக்கறிஞர் ராஜிவ்காந்தி குற்றப்பின்னணி கொண்டவர். அவருக்கு ஆதரவாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆகவே, இச்சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பது உறுதியாகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ராஜிவ்காந்தியை கைது செய்ய வேண்டும். அண்ணாமலையை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

சென்னை உயர் நீதிமன்றம் அருகே, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன், அக்., 7ம் தேதி அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு, 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ்., --- பா.ஜ., வினர் பின்னணியில் உள்ளனர் என்பது, எமது விசாரணையில் தெரிய வருகிறது. எனவே, தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரிக்க வேண்டும். பின்னணியில் உள்ள சதியினை கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளை சார்ந்தவர்களையும், முழுமையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Modisha
அக் 11, 2025 23:17

முன்னால் செல்லும் ஸ்கூட்டர்ஐ வைத்து பின்னால் வந்த கார் மேல் மோத சதி . அடடா , என்ன அறிவு இவருக்கும் இவருக்கும் தொண்டர்களுக்கும்


சாமானியன்
அக் 11, 2025 22:00

தான் என்ன பேசினாலும் அல்லது எதைச் செய்தாலும் ஸ்டாலின் தன்னை கைது செய்யமாட்டார்கள் என்பதில் தெளிவாக உள்ளார். திமுக தலைமையே மாறலாமே ! வாய்ப்புக்கள் வரலாம்.


Venkat esh
அக் 11, 2025 20:43

சோற்றை தின்பவர்களால் இப்படி பேச முடியாது


பாரத புதல்வன்
அக் 11, 2025 20:42

இவன் முட்டாளா?பைத்தியமா?இல்லை இரண்டும் சேர்ந்த கலவையான உருவமா?


srinivasan
அக் 11, 2025 19:33

போங்க... பிளாஸ்டிக் நாற்காலி


ஆசாமி
அக் 11, 2025 18:56

கட்ட பஞ்சாயத்து கட்சி


Rameshmoorthy
அக் 11, 2025 18:35

VCKa should be banned and these goons should be treated properly in jail


Vasan
அக் 11, 2025 15:57

அது விபத்தா அல்லது சதியா என்று கேட்டிர்களே என்றால், என்னை பொறுத்த மட்டில் அது விபத்தும் இல்லை, சதியும் இல்லை என்று கூற நினைக்கும் பொழுது அது விபத்து தான் மற்றும் சதி தான் என்று ஐயமின்றி கூற முடிகிறது. அதை விபத்து என்ற கோணத்தில் பார்த்தல் சதி என்றும், சதி என்ற கோணத்தில் பார்த்தால் விபத்து என்றும் தெள்ள தெளிவாக தெரிகிறது. நேற்று நடந்ததை மறந்து, நாளை நடக்க இருப்பதை செப்பனே செய்வோம். வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு.


Gokul Krishnan
அக் 11, 2025 15:17

ஆமாம் இவர் மீது விபத்து சதி செய்ய பிஜேபி ஆர் எஸ் எஸ் மட்டும் இல்லை அமெரிக்காவின் எஃப் பி ஐ, சிஐஏ இஸ்ரேலின் மொசாட் சீனா மற்றும் வட கொரியாவின் ரா அமைப்புகள் கூட இருக்கலாம் ஏன் என்றால் இவர் மிக பெரிய அப்பாடக்கர்


srinivasan
அக் 11, 2025 19:40

அந்த அப்பாடக்கரிடம் பயந்து தானே செந்தில் பாலாஜியை ஏற்பாடு செய்தீர்கள்


அருண் பிரகாஷ் மதுரை
அக் 11, 2025 12:34

எப்போ பார்த்தாலும் நசுக்கிறாங்க, பிதுக்குறாங்கனு பேசிக்கிட்டு திரை மறைவில் ரவுடித்தனம் செய்துகொண்டு இருந்தார்கள்.பொது வெளியில் மாட்டிக் கொண்டார்கள்..இதை போயி பெரிசு படுத்துகிறீர் கள்.விடுங்கப்பா. சரி அடித்தது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.. அப்போ அடித்ததை ஆமாம் அடித்தோம் என்று தில்லாக சொல்ல தெம்பு, திராணி இல்லையா உங்களுக்கு.மீசையை முறுக்கி சொல்லுங்கள் பார்ப்போம்..ஸ்டாலின் அடித்த அடியில் இவர் ஆடிப் போய் விட்டார் போலவே..இப்போ தெரியுதா அடிப்பவனுக்கும் அடி வாங்குபவனுக்கும் உள்ள வித்தியாசம்..2 சீட்டுக்கும் 4 சீட்டுக்கும் திமுக கட்சியிடம் அடி வாங்குபவனாக இருக்க பழகி விட்டார்.. அப்போ அடி வாங்கும் அடிமை மாதிரி பேசணும்.